Header Ads



செக்ஸ் DVD க்களை வைத்திருந்தமை உள்ளிட்ட ரஞ்சன் மீது 4 குற்றச்சாட்டுக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய, 

2, சட்டவிரோத துப்பாக்கியை கைவசம் வைத்திருத்தல், 

3, மில்லி மீற்றர் 9 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல், 

4, ஆபாச காணொளிகள் அடங்கிய டீ.வி.டிக்களை வைத்திருத்தல் 

போன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று- 04- மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் மேற்கொள்ளபபட்ட தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹிரு தொலைக்காட்சி

2 comments:

  1. வீட்டில் பலகத்காரமாக தேடியெடுத்த பொருட்களை வைத்து குற்றச்சாட்டை நிறுவ முயற்சி செய்யும் நீதி எந்த சட்டத்தில் உள்ளது. இந்த நாட்டில் எந்த ஒரு பிரஜையையும் பலகத்காரமாக அவருடைய வீடடில் நுழைந்து நுணுக்கமாக தேடுதல் நடாத்தினால் சட்டத்துக்கு புறம்பான பொருட்களை வைத்து அந்த நபரை குற்றவாளியாக்க எந்த சட்டநூலில் சட்டம் இருக்கின்றது. இது தனிநபர் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக நீதித்துறை நடந்து கொண்டால் அதற்கு எதிராக தனிநபர்கள் சட்டத்தை நாட அவர்களுக்கு சட்ட செலவுகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். இது சிகரட்டை விற்று மக்கள் அதனைப் பாவித்து புற்றுநோய் வந்தால் அரச வைத்தியசாலை இலவசமாக வைத்தியம் செய்வது போன்ற செயல்தான்.

    ReplyDelete
  2. எதிர்பார்க்கப்படட ஒன்று!
    இதுதான் கோட்டாவின் ஜனநாயக அரசியல்!!

    ReplyDelete

Powered by Blogger.