January 26, 2020

சீனா துடிக்கிறது...!


சீனா துடிக்கிறது
சீன அதிபர் கதறுகிறார்
சீனர்கள் சாலைகளைில் 
சுருண்டு விழுந்து மடிகின்றனர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே 
மயங்கி விழுந்து உயிரை விடுகின்றர்
சீனாவின் பல நகரங்கள் 
தடுப்பு காவலுக்குள் தத்தளிக்கிறது
போக்குவரத்து வசதியின்றி தடுமாறுகிறது
தடுக்கமுடியா வேகத்தில் நோய் பரவுகிறது
தடுப்பு நடவடிக்கைகளையெல்லாம் 
தகர்த்து எறிகிறது
சீன அதிபர் பதட்டதுடனும் 
படபடப்புடனும் காண படுகிறார்
#பிறர்_துன்பத்தில்_இன்பம்_காண்பது 
#மனிதநேயம்_அல்ல_என்பதை_நாமும்_அறிவோம்
ஆயினும் அண்மை காலத்தில்
நமது கண்களை குழமாக்கிய 
பல கொடிய நிகழ்வுகள் நம் நினைவில் நிழலாடுகிறது
#காரிருளில்_மனமுருகி_பிரார்தித்த_
#உய்கூர்_முஸ்லிம்களின்
#பிரார்த்தனைகள்_வானத்தின்_
#திரையை_அகற்றிவிட்டதோ
#படைத்தவனால்_ஏற்று_கொள்ள_பட்டுவிட்டதோ
என்று எண்ண தோன்றுகிறது
அரசன் அன்று கொல்வான் 
தெய்வம் நின்று கொல்லும் 
என்று சொல்ல தோணுகிறது
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை 
காட்ட நாமும் இயேசுவும் அல்ல
நம்மை அழிப்பவனின் மீது கருணைகாட்ட 
நாம் மகானும் அல்ல
இறைவனின் பிடி கடுமையானது
அவனது பிடியிலிருந்து எவனும் தப்ப முடியாது
ஆட்சி அதிகாரத்தை கொண்டு ஆட்டம் போடும்
கொடியவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கொடிபிடிக்கும்
மிருகங்களுக்கும் சொல்லி கொள்கிறோம்
நீங்கள் அறியாத புறத்தில் இருந்து அழிவு உங்களை நோக்கி வரும்
தவறை திருத்தி கொள்ளுங்கள் நீதியின் பக்கம் நிலைத்து நில்லுங்கள்
அப்பாவிகளின் சாபத்திற்கு ஆளாகாதீர்
எங்கள் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ள படும் போது 
உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது
#மனமுருகி_பிரார்த்திப்போம்_அடக்கு_முறையை 
#கட்டவிழ்த்து_விடும்
சர்வாதிகாரத்திற்கு எதிராக
சர்வாதிகாரத்திற்கு துணை நிர்ப்போருக்கு எதிராக

12 கருத்துரைகள்:

இந்த அருமையான கவிதைத் துணுக்கை எழுதிய, பிரசுரித்தவர்களுக்கு மிகவும் நன்றி, மனிதன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழியும் ஞாபகத்துக்கு வருகிறது. உண்மையில் சீனாவில் உய்கூர் முஸ்லிம்கள் மட்டுமன்றி, அரசின் அநியாயத்துக்கும் கொடுமைக்கும் பலவந்தமாக உள்வாங்கப்பட்ட சீன முஸ்லிம்களின் பிரார்த்தனை தான் இது எனத் தோன்றுகிறது. அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையில் இருந்து எம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாக.

வேண்டாம் இந்த வாதம்
அவர்களுக்காகவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்!

மறுமை வாழ்க்கை இன்றி இம்மை வாழ்க்கையை நியாயப்படுத்த முடியாது. அவரவர் தமது செயலுக்குரிய கூலியை மறுமையில் பெற்றுக்கொள்வர்.

Its not good to publish this type of notes at this moment....Just let us pray because there are lots of good people in the PRC....
Dont show that Muslims are hard-minded...!!!

Also, Islam is urging the peace and most kindness to anyone even to your enemy than Jesus instructed...

சீன அரசு இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கடும் போக்கைக்கைவிட விட வேண்டும்.உலக மக்களைச்சுரண்டிவாழும் நிலையையும் கைவிட வேண்டும்.கூடிய வட்டிவீதத்தில் கடன் கொடுத்து நாடுகளை அடிமையாக்கும் நரித்தந்திரத்தையும் கைவிட விட வேண்டும்

Typical Muslims mentality
That's why China put them in a camp to civilize them

அந்த முஸ்லீங்களும் சீனாவில் தான் இருக்கிறார்கள்.

தீர்ப்பு கூறுபவன் இறைவன். ஹிதாய‌த் கிடைக்க இறைவனை பிராத்திப்போம்.

அரசாங்கமோ,அரசனோ செய்த அநியாயங்களுக்குப் பதிலாக அப்பாவிகளை அல்லாஹ் தண்டிப்பான் என்று எந்த குர்ஆனில், ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிறது? இது போன்ற மடத்தனமான, அறிவுக்குப் பொருந்தாத ஆக்கங்களை வெளியிட்டு ஜப்னா முஸ்லிம் இணையம் தன் தரத்தைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

Please remove this article. This is stupid.

Please remove this article. No one can be do anything but Allah only do anything this is Allah only know when this problem will finish . Please make Duwa for Chinese people. Allah Kareem

Post a Comment