Header Ads



ஈரான் - அமெ­ரிக்க பதற்றம், இலங்­கைக்கு எவ்­வி­தத்­திலும் அச்­சு­றுத்­த­லா­காது - இரா­ணுவ தள­பதி

(எம்.மனோ­சித்ரா)

ஈரான் – அமெ­ரிக்க பதற்றம்  எவ்­வி­தத்­திலும் இலங்­கைக்கு அச்­சு­றுத்­த­லா­காது.  அவ்­வாறு அழுத்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணியும் இல்லை என்று தெரி­வித்த இரா­ணுவ தள­பதி லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா, இலங்கை மிகச் சிறிய நாடு என்­பதால் சர்­வ­தேச பிரச்­சி­னை­களில் தலை­யி­டாது சுமு­க­மாகச் செயற்­ப­டு­வதே சிறந்த வழி என்றும் குறிப்­பிட்டார்.

வருட ஆரம்­பத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் ஏற்­பட்ட காட்­டுத்­தீயின் கார­ண­மாக பாதிப்­புக்குள்­ளான உயி­ரி­ழந்த மிரு­கங்கள் மற்றும் நபர்­க­ளுக்­காக பிரார்த்­திக்கும் மத வழி­பாட்டு நிகழ்வு நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பாது­காப்பு படைத் தலை­மை­ய­கங்கள், பயிற்சிப் பாட­சா­லைகள் போன்­ற­வற்றை உள்­ள­டக்கி செவ்­வாய்­க்கி­ழமை களனி ரஜ­ம­ஹா வி­கா­ரையில் பூஜை நிகழ்வு இடம்பெற்­றது.

இந் நிகழ்வு  பதில் பாது­காப்பு பிர­தானியும் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா தலை­மையில் நடை­பெற்­றது. நிகழ்வின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர்,

கேள்வி : அமெ­ரிக்க ஈரான் பதற்றம்  உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது. இதனால் அமெ­ரிக்­கா­வுடன் இலங்கை செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தங்கள் மூலம் ஏதேனும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டுமா?

பதில் : இல்லை. அவ்­வாறு எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் இலங்­கைக்கு நெருக்­க­டிகள் ஏற்­ப­டாது. அவ்­வாறு ஏற்­ப­டு­வ­தற்கு ஏது­வான கார­ணி­களும் இல்லை.

கேள்வி : சுமார் 2 இலட்­சத்­துக்கும் அதி­க­ள­வான இலங்கை மக்கள் வெளி­நா­டு­களில் தொழில் ­பு­ரி­கின்­றனர். அவ்­வாறு வெளி­நா­டு­ களில் தொழில்­ பு­ரி­ப­வர்­க­ளுக்கு ஏதேனும் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுமா?

பதில் : சில நாடு­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளதால் வெளி­நா­டு­களில் பணி­ பு­ரி­ப­வர்­களும் ஏதேனும் சிக்­கல்கள் ஏற்­ப­டலாம் என்ற நிலைமை ஏற்­பட்­டது. எனினும் உரிய நேரத்தில் அவை தீர்க்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்று நாம் எண்­ண­வில்லை. எமது நாடு மிகச் சிறி­யது. எனவே நாம் எந்தப் பிரச்­சி­னை­யிலும் தலை­யி­டாது சுமுகமாக செயற்பட வேண்டும்.

கேள்வி : ஈரான் – அமெரிக்க மோதலால் இலங்கைக்கு ஏதேனும் அழுத்தங்கள் பிரயோ கிக்கப்படுமா?

பதில்: ஈரான் - அமெரிக்க மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ  ஏற்படுத்தாது என்றார்.

No comments

Powered by Blogger.