Header Ads



சஜித்தின் எதிர்ப்பு ஆச்சரியமளிக்கிறது : பிரதமர்

எம். சி. சி ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி  தலைவர் சஜித் பிரேமதாஸ   தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியத்திற்குரியது.   இவ்வொப்பந்தம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் மக்களுக்கு  பகிரங்கப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிரான  ஒப்பந்தங்களை  ஒருபோதும் செய்யமாட்டோம் எனவும் அவர் இன்று -19- ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன்   நிறுவனத்துடனான ஒப்பந்தம் நாட்டுக்கு எதிரானது ஆகவே அதனை கிழித்தெறிய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ  நாடு முழுவதும் சென்று குறிப்பிட்டுக் கொள்வதுடன், மாநாயக்க தேரர்களையும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில்    குறிப்பிட்டுள்ளமை  கவனத்திற்குரியது.

இவரது கருத்திற்கு  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும், பாராளுமன்ற  பின்வரிசை உறுப்பினர்களும் முழு இணக்கத்தையும்  தெரிவித்துள்ளார்கள்.

எதிர்க்கட்சி  தலைவர்  சஜித் பிரேமதாஸ  கடந்த அரசாங்கத்தில்   ஐக்கிய தேசிய கட்சியின்  பிரதி தலைவராகவும்,  அமைச்சரவையின் பலம் கொண்ட அமைச்சர்  என்ற   பொறுப்பில் இருந்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எம். சி. சி. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்  என முன்னாள்  பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க  பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்  நாட்டுக்கு எதிரான ஒப்பந்தத்தை மக்களுக்கு தெரியாமல் செய்ய வேண்டாம் என  அரசாங்கத்திற்கு  தனது எதிர்ப்பினை  எதிர்க்கட்சி  தலைவர்  சஜித் பிரேமதாஸ அப்போது குறிப்பிடவில்லை.

இரகசியமாக முறையில் ஒப்பந்தம்  செய்ய  அரசாங்கம் முயற்சித்த போது  இவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தார். குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் கால  பிரச்சார  மேடைகளில் கூட இவ்வொப்பந்தம் குறித்து  பேசவில்லை.

அரசியல்வாதிகளுக்கு  அடிப்படை  கலாச்சாரம் இன்றியமையாததாகும். தனது அரசாங்கம் மக்களுக்கும்,  பாராளுமன்றத்திற்கும் அறிவிக்காமல்  துரிதமாக  இந்த ஒப்பந்தத்தை  கைச்சாத்திட போகின்றது என்பதற்கு எதிர்ப்பு  தெரிவிக்காமல் தற்போது  அரசாங்கத்தின்  செயற்பாடுகள் குறித்து கருத்துரைப்பது ஆச்சரியத்திற்குரியது.

எவருக்கும் தெரியாமல்  இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட போகும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சுதந்திர  சதுக்கததில்   பௌத்த பிக்கு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டமை யாவரும் அறிந்ததே.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்த அதீத அக்கறை கொண்டிருந்தார்.   எம். சி. சி. ஒப்பந்தம் குறித்து அன்று  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும்  ஒரே  நிலைப்பாட்டிலே  இருந்தார்கள்.  இந்த விடயங்களை  நாட்டு மக்கள்  அனைவரும் மறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டே  எதிர்க்கட்சி தலைவர் தற்போது கருத்துரைத்து வருகின்றார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவையினால்  கைச்சாத்திட  கடந்த ஒப்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்ட எம். சி. சி ஒப்பந்தம் குறித்து ஆராய துறைசார் நிபுணர்களை  உள்ளடக்கிய  விசேட குழுவினை  ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு  அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும், அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவை என்பதும் மக்களுக்கு   பகிரங்கப்படுத்தப்படும்.

நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் அறிவிக்காமல் எந்த ஒப்பந்தங்களையும்  செய்துக் கொள்ள மாட்டோம். அத்துடன் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு சிறிதேனும் இடம் கிடையாது. இதுவே  ஐக்கிய தேசிய கட்சியின்  முக்கிய தரப்பினருக்கும்,  பொதுஜன பெரமுனவின் முக்கிய  தரப்பினருக்கும் இடையிலான  பாரிய வேறுப்பாடு ஆகும் என அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. Public surprise about both of you....

    All opposed MCC and try to get vote from public... but both of u cheat public....

    ReplyDelete
  2. சஜிதை தொற்கடிக்க செய்யப்பட்ட பிரச்சாரங்களில் ஒன்று இந்த அமெரிக்காவுடனான ஒப்பந்தம்.அப்போது விமல் அந்த ஒப்பந்தம் நாட்டிற்கு எதிரானது என பிரச்சாரம் செய்தவர்களுக்கு இப்போது நிபுணர்கள் குழு ஆராய்ந்த பின்னர் அவ்வொப்பந்தம் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்கின்றனர்.பிரச்சாரம் செய்யும் போது நிபுணர்குழு தேவைப்படவில்லை; இப்போது தேவைப்படுகிறது.என்ன தந்திரம். சஜித் சொல்வது ஆச்சரியமாகப்படவில்லை.அவர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாக அவ்வொப்பந்தத்தை பார்த்திருக்கலாம்.ஆனால் அது நாட்டிற்கு விரோதமானது எனச் சொல்லி வென்ற நீங்கள் அதனை நிபுணர்குழு மூலம் நாட்டிற்கு நல்லதா கெட்டதா எனப் பார்ப்போம் எனச் சொல்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள்,முன்னைய அரசியல்வாதிகளின் பேச்சை நம்புவது ஒன்றே ஒருவன் நரகத்துக்குச் செல்வதற்கான நியாயமான காரணியாக அமையும் என்பதற்கு மேல் உள்ள செய்தி மிகச்சிறந்த உதாரணமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.