Header Ads



4 மாதங்கள் சிறையிலிருந்த Mp விடுதலை செய்யப்பட்டார்

புத்தளம் மாவட்ட ஐக்கியத் தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. 

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு இன்று (21) வரை 3 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

கடந்த 2004 ஆம் ஆண்டு சிலாபம் நகரில் இடம்பெற்ற சட்டவிரோதமாக கூட்டம் ஒன்றின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கும் 12 மணிக்கும் இடைப்பட்டதொரு நேரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும், 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு மாதாந்தத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையம் வந்து கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. 

ஆனால், சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற் கொண்டுவரப்பட்ட நிலையிலேயே அவர் ஒக்டோபர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.