Header Ads



எமது நாடு, சிங்கள பௌத்த நாடு - சஜித்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க கட்சியில் இருந்த சிலரே செயற்பட்டதால் கட்சியின் தலைமை பதவி இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள போவது இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மத்துகம ஒச்சிட்டிகல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, என்னை வெற்றியடைய செய்யவா? அல்லது தோல்வியடைய செய்யவா? சிலர் செயற்பட்டனர் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. எமது நாடு சிங்கள பௌத்த நாடு. ஆனால் மற்றுமொரு பரஸ்பரம் எதிரான ஒரு நிலைப்பாடு தலைத்தூக்கியது. 

வேட்பாளர் பதவிக்காக அலைந்துதிரிய வேண்டி ஏற்பட்டது அதுவரை எதிராலி அனைத்துவித கூட்டங்களையும் முடித்துவிட்டார். 

எமது கட்சியை சேர்ந்தவர்களே சேறு பூசும் பத்திரிகைகளை அச்சிட்டனர். இந்த நிலைமை இன்னும் 25 ஆண்டுகள் வரை முன்னெடுக்கப்படும். இவற்றை அவதானிக்கும் போது எனக்கு ஓய்வுபெற எண்ணியது. 

3 comments:

  1. Why why why almost budhist fear on this matter.

    ReplyDelete
  2. இருக்கும் ஆட்சியாளர்கள் பேசியதை விட இன்னும் மேல் சென்று இனவாதம் பேசினால்தான் இவர் வெற்றி பெறலாம். இது தான் இன்றைய இலங்கையின் அரசியல் நிலமை. ஒரு வேளை சிறுபான்மை அனைவரையும் வௌியேற்ற வேண்டும் என்று சொன்னால்தான் சிங்களவர்கள் வாக்களிப்பர் என்று எண்ணினால் அதனைச் சொல்லவேண்டி வரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இலங்கையில் கட்சிகள் உருவான வரலாறும் அக்கட்சிகள் வெற்றிபெற பாவித்த கொள்கைகள் பற்றிக் கூர்ந்து அவதானிப்போருக்கு இது புரியும்.

    ReplyDelete
  3. Mr. Suhaib is correct... it is the trend of politics throughout the SL history

    ReplyDelete

Powered by Blogger.