December 18, 2019

முஸ்லிம்கள்தான் எமது உறவினர்கள், தமிழர்கள் இலங்கையை ஆக்கிரமித்தவர்கள் - மேர்வின் சில்வா

இலங்கையின் வரலாறு தெரியாமல் வடமகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டில் வாழ்கிறார் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் இலங்கை வரலாறு மட்டுமின்றி அவர் உலக வரலாற்றைக் கூட தெரியாமல் இருக்கின்றார், நாட்டின் சமூகம் மற்றும் கலாசார அறிவும் அவருக்கு இல்லை எனவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைக்கு 3000ம் ஆண்டுகளுக்கு முன்னேறி இலங்கையில் சிங்களம் பேசும் மக்கள் வாழ்ந்து வந்தார்கள் எனவும் உலகத்தில் ஏனைய இனத்தவர் ஆடை அணிவதற்கு முன்னர் இலங்கை சிங்களவர் ஆடை அணிந்தனர் எனவும் முன்னாள் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா,எமக்கு சிங்களம் என ஒரு மொழி இருந்தது. இயக்கர், நாகர், தேவர், ராக்ஷர் என நான்கு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள். இலங்கை சிங்களவர்கள் இராவணனின் காலத்தில் இருந்து வாழ்கிறார்கள்.

புத்த பகவான் தோன்றுவதற்கு முன்னர் இருந்தே இலங்கையில் சிங்களவர்கள் இருந்தார்கள் என வரலாறு கூறுகிறது.இயக்கர்கள் எனப்படுபவர்கள் இராவணனின் பரம்பரையினர். விஜயன் என்பது சிங்கபாகு மற்றும் சிங்கசீவலியின் மூத்த மகன்.

விஜயன் இலங்கைக்கு வருகை தந்து இயக்கர் (அரக்கர் ) இனத்தை சார்ந்த குவேனி என்னும் இலங்கை பெண்ணை திருமணம் செய்கிறான். அதுவே வரலாறு.அப்படியானால் இவர்கள் எப்படி இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு அல்ல என கூறுவார்கள்? இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தான் எமது பழைய உறவினர்கள்.

தமிழர்கள் இலங்கையை ஆக்கிரமித்தவர்கள். ஆக்கிரமித்து வந்தவர்களை கொன்று குவித்தார்கள், விரட்டியடித்தார், அதேபோல எமது நாட்டின் மன்னர்கள் முன் மண்டியிட்டவர்களை இங்கு வைத்துக் கொண்டார்கள்.

சிலர் இந்தியாவில் இருந்து அடிமைகளாக தொழில் செய்ய வந்தார்கள். நான் கூறுவது மலையகத்தில் தேயிலை பறிக்கும் சகோதர தமிழினத்தவர்களை அல்ல. அவர்கள் எமது நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாக இருந்து பாடுபடுபவர்கள்.

அவர்களை நான் எனது தலைக்குமேல் கைகூப்பி வணங்குகிறேன். அவ்வளவு புனிதமானவர்கள் அந்த மக்கள்.எனவே விக்னேஸ்வரன் கூறுவது போல இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழர்கள் யாருமில்லை.

அனைவரும் வெளியில் இருந்தே வந்தார்கள். முஸ்லிம்களும் இங்கிருக்கவில்லை. சிங்கள பௌத்தர்கள் மாத்திரமே இங்கு வாழ்ந்தார்கள்.

புத்த பகவானே கூறியிருக்கிறார் உலகிலே 5000ம் ஆண்டுகளுக்கு இலங்கையில் மாத்திரமே பௌத்த மதம் நிலைத்து நிற்கும் என்று.

பௌத்த மதம் கூறுகிறது ஒரு பௌத்தன் ஏனைய மதங்களுக்கும், இனங்களுக்கும் பாதிப்பு விளைவிக்க கூடாது என்று. முஸ்லிம்கள் ஒரு சஹானில் உணவை வைத்து அனைவரும் உண்ணுவது போல நாமும் ஒருபக்கம் பாற்சோறு உண்ணுவோம், ஒருபக்கம் தோசை உண்ணுவோம், மறுபக்கத்தில் பிரியாணி உண்ணுவோம்.

நாம் ஒன்று சேர்ந்து உண்ணுவோம், பயணம் செல்வோம், நாட்டை அபிவிருத்தி செய்வோம்.ஆனால் இந்த நாட்டின் உரிமை பாத்திரம் உள்ளது சிங்கள பௌத்தர்களாகிய எம்மிடமே.

இருந்தாலும் நாம் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் இந்தநாட்டில் இருக்கும் எல்லா இனத்தவரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம். அது தவிர நாம் எந்த இனத்தவரையோ, மதத்தவரையோ எதிர்க்கவில்லை. அவர்களுக்கு எதிராக நாம் எந்தவிதமான இன்னல்களையோ கொடுக்கவில்லை.

ஆனால் இவர்கள் எமக்கு பிரச்சினை ஏற்படுத்தி இன்னல்களை கொடுப்பார்களாயின் நான் நாட்டில் உள்ள அனைத்து சிங்கள பௌத்த மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் அன்று நாட்டைக் காக்க துட்டகைமுனு மன்னன் கைகளில் எடுத்த வாளை நீங்களும் கைகளில் எடுத்து துரத்தியடிப்பதற்கு தயங்காதீர்கள் என்பதனை. நாம் அவ்வாறு செய்வதற்கு தயார். அவ்வாறு செய்யாமல் இருக்க எம்மால் முடியாது.

11 கருத்துரைகள்:

இது தான் வரலாறு இன்று வரலாற்றை தமிழர்கள் மாற்றி எழுத முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு மறைமுக சூழ்ச்சி செய்கின்றார்கள்.

who built the sivan temples which washiped by Ravana

Mervin's relatives...
No wonder..why they are so violent people

Dear AJAN, we are waiting for your comments.LOL

NGK உமக்கு தமிழரின் மேல் வெறுப்பு என்றால் எதுவானாலும் கதைப்பீரா ...முஸ்லிம்களுக்கும் சிங்களவருக்கு இடையில் தமிழர் எங்கே வந்தனர் ....அதை முதலில் சொல்லும்

Dear Admin JM, your always giving well come comments to this racist AJAN as first priority.so many my article were neglect by you all, when I reply for that abnormal person.it seem to very shameful what your doing.not only for me but also some other readers..we had been keep on watching you.. you have mentioned at your page that as your web policy, parapatsam,pal verupadu,inavadathai posithal,bayangara vadatai adarithal pondravatrukku adaravalikadu. but many time this fellow AJAN insult about Islam,Islamic article,Muslim,Muslim news,Muslim leaders your just well coming his comment publishing very soon and fast.his comment is great and honest other then he insult Muslims and Islam? how shameful work your doing.your now becoming on behalf of he side publish. this article if dare?

THIS MAN MERVIN SILVA WHO WAS SELLING VEGETABLES AT NARAHENPITA POYA POLA WAS A SERVANT AT ROSMED PLACE CHANDIRIKAS HOUSE.HE FOUND OUT ABOUT ANURAS AND CHANDIRIKAS PRIVATE RELATION SHIP WITH THIRD PARTIES AND BY BLACK MAILING THEM GOT APPOINTED TO PARLIAMENT.THIS THIRD GRADE MAN WHO KNOWS NOTHING ABOUT HISTORY ONLY HAS A BIG MOUTH.HE MADE MONEY BY SELLING DRUGS AND STILL DOING SAME USING THIRD PARTIES.THE JAFFNA MUSLIM WEB SITE MUST STOP GIVING SPACE FOR THIS TYPE OF THUGS.

It seems I have many FANS here.
Thanks to all my fans

Uneducated joker.Even Sinhalese don't take him seriously. He says Raven is Sinhalese. One thing that he said is correct, Muslims are his relatives.

Ajan your LTTE people are barbarians

Post a Comment