Header Ads



வீம்பு செய்த 2 போக்குவரத்து, பொலிசாருக்கு ஏற்பட்ட நிலை

#ஏறாவூர் #போக்குவரத்து #பொலிசார் #இருவர் #பிணையில் #விடுதலை!
17-11-2019 அன்று கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவரது வாகனத்தை பரிசோதனைக்காக நிறுத்துவதற்கு, சாரதியின் கண்ணுக்கு டொச் வெளிச்சம் படக்கூடியவாறு அடித்ததால், தடுமாற்றத்துடன் நிறுத்தப்பட்ட காரின் ஆவனங்களை பார்வையிட அதிகார தோரனையில் அனுகியதால்,
உள்ளிருந்த சட்டத்தரணி ,
ஆவனங்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து காட்டுகிறேன் என்று சொல்லி காரை செலுத்திக் கொண்டு பொலிஸ் நிலைய அருகாமையிலுள்ள ஹொட்டலில் நிறுத்தி இரவு உணவை உட்கொள்ள ஆயத்தமானபோது,
மேற்படி போக்குவரத்து பொலிசார் இருவரும், ஹொட்டலில் நின்று கொண்டிருந்த சட்டாத்தரணியை பார்த்து,
டொகிமன்ஸ்ஸை கொண்டு வா! காரை திறந்து காட்டு, செக் பண்ணணும்! என்று கடினமான வார்த்தைகளால் கூறியதால்,
எல்லாம் பரிசோதிக்கப்பட்டு ஆவனங்களை சரி கண்டதன் பின்னர் பொலிஸார் செல்ல, சட்டத்தரணியும் வீடு சென்றுள்ளார்.
சட்டத்தரணியிடமே போக்குவரத்து பொலிசார் இவ்வாறு அதிகார துஷ்பிரயோகத்திதில் நடந்து கொள்ளும்போது,
பொதுமக்களோடு எவ்வாறு நடந்து கொள்வார்கள்? என்று கவலை கொண்ட சட்டத்தரணி,
உடனடியாக குறித்த இரு பொலிசாருக்கு (சார்ஜன், பொலிஸ் கொஸ்தாபல்) எதிராக 32516/PVT/2019 இலக்கத்தில் 
வழக்கினைத் தொடர்ந்த போது,
நேற்றையதினம் (18/12) குறித்த இரு பொலிசாரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் கூட்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு,
ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டு,
எதிர்வரும் 31/01/2020 அன்று நீதிமன்றத்துக்கு ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேலை பறிபோகுமா? அல்லது சட்டத்தரணியுடன் வழக்கு சமாதானப் படுத்தப்படுமா ? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 #நஸீர்

3 comments:

  1. Very good work against the dogs. No excuse must be taken in shake of public concern please.

    ReplyDelete
  2. Lack of hard training at police training school

    ReplyDelete

Powered by Blogger.