Header Ads



"தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி எந்த, அறிக்கையையும் வெளியிட போவதில்லை"

வாக்கெடுப்பு முடிவடையும் வரை ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்த அறிக்கையையும் வெளியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் சம்பந்தமாக ஜனாதிபதி இன்று அல்லது நாளை விசேட அறிக்கையை வெளியிட உள்ளதாக நாடு முழுவதும் மிகப் பெரிய பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், இரா. சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் இதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பொய்ப் பிரசாரத்திற்கு ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதியின் முழுமையான ஆசியுடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க தீர்மானித்தது. ஜனாதிபதி எடுத்த இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், தேர்தல் சம்பந்தமாகவும் எந்த வேட்பாளர் குறித்தும் எவ்விதமான அறிக்கையை வெளியிட போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

மக்களின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள சந்திரிக்கா, சம்பந்தன், ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினர் பல்வேறு சக்திகள் ஊடாக மக்களை ஏமாற்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக தேர்தல் நிறைவடையும் நவம்பர் 17 ஆம் திகதி, கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் பொறுப்பேற்கும் வரை ஜனாதிபதி எந்த அறிக்கையையும் வெளியிட மாட்டார் என மிகவும் பொறுப்புடன் தெரிவித்து கொள்ளவதாகவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. நல்ல எண்ணத்தோட வந்த மனிதனை ஒன்றும் செய்ய விடாமே ரொம்ப காயப்படுத்திட்டீங்க. அதான் மனிதன் ஒதுங்கிட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.