Header Ads



இலங்கை குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் - சுவாச ​நோயாளர்களே அவதானம்

வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதனால் சுவாச ​நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் புது டெல்லியை அண்டிய பகுதிகளில் வளி மாசு நிலவுவதால் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு மேலும் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வளியின் தர குறிகாட்டி 40-க்கும் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் வளி தர குறிகாட்டி 150 – 200 வரை காணப்பட்டதாக நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

சாதாரணமாக வளியின் தரம் 101 முதல் 150 வரையில் வீழச்சியடைந்தால் சுவாச ​நோயாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.