புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, ஊடகவியலாளர் பலர் மீதான வன்முறைகள் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்து வந்த உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.பி.திசேராவுக்கு உடனடியாக அமுலுக்க வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான பத்திரத்தை பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன இன்று -30- வெளியிட்டிருந்ததுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியும் அதற்காக பெறப்பட்டுள்ளதென கூறப்படுகிறது.
ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூட நடத்தப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், ரிவிர பத்திரிகை ஆசிரியர் கடத்தி தாக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளும் இவராலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ரதுபஸ்வல சம்பவம் தொடர்பாக நான்கு இராணு சிப்பாய்களுக்கு எதிராக வழக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கதாகும்.
1 கருத்துரைகள்:
இது சட்டத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பயங்கரமான முடிவு. அந்த அப்பாவி மாணவிக்கு நியாயம் கிடைக்குமா என்பது பற்றி பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
Post a Comment