Header Ads



சிங்களவர், கிறிஸ்தவர் வாக்குகளினால் கோத்தபய வெற்றிபெறுவார் - சிறுபான்மை மக்களின் வாக்குகளினால் அல்ல

ஐக்­கிய தேசிய கட்சி ஆட்­சியில் இருக்­கின்­ற­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காரணம். ஆகவே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்ன  கோரிக்­கை­களை முன்­வைத்­தாலும் அதற்கு  ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும் என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக்ஷ தெரி­வித்தார்.

கடந்த  2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலை  சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தீர்­மா­னித்­தாலும் கூட  இம்­முறை தேர்­தலில் அது நடக்­காது. பெரும்­பான்மை வாக்­கு­களில் கோத்­தா­பாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். ஆனாலும்  இதில் கிறிஸ்­தவ மக்­களின் முழு­மை­யான வாக்­குகள் கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

நிகழ்­கால அர­சியல் நகர்­வுகள் குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

மேலும்  குறிப்­பி­டு­கையில், இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த காலத்தில் இருந்து நிலங்­களை சர்­வ­தே­சத்­திற்கு விற்கும் கொள்கை மட்­டுமே கையா­ளப்­பட்­டது. உடன்­ப­டிக்­கைகள் மூல­மாக துறை­மு­கங்கள், காணிகள் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டன. இதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட தீர்­மா­னங்­களே அதி­க­மாக இருந்­தன. எனினும் நான் சிறிது காலம் பொறுத்­துக்­கொண்டு அர­சாங்­கத்தில் இருந்தேன். ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்ட கார­ணி­க­ளுக்கு அமைய கல்வி அமைச்­சினை பொறுப்­பேற்று அதன் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்கை எடுத்தேன்.

இந்த அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­ச­ரவை மிகவும் பல­வீ­ன­மான அமைச்­ச­ர­வை­யாகும். நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் தேசிய கொள்­கைக்கும் அமை­வாக எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. ஒரு சில அமைச்­சர்கள் தமக்கு தேவை­யான நபர்கள் குறித்து அவர்­க­ளுக்கு சாத­க­மாக செய்ய வேண்­டிய விட­யங்கள், நிலங்­களை விற்கும் நட­வ­டிக்­கைகள் என்­பது குறித்து மட்­டுமே பேசினர். ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் விற்­கப்­பட்­டி­ருக்­கா­விட்­டி­ருந்தால் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றி­ருக்­காது. ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற  பிர­தான இரண்டு கார­ணிகள் உள்­ளன. தகு­தி­யற்ற பொலிஸ்மா அதிபர் ஒரு­வரை நிய­மித்­த­துடன்   ஒரு­சில மோச­மான அதி­கா­ரி­க­ளுக்கு பொறுப்­புக்­களை கொடுத்­தனர். அர­சி­ய­ல­மைப்பு சபையில் நான் அப்­போதும் எதிர்த்தேன். எனினும் பிர­தமர் என்னை தடுத்தார். ஜனா­தி­ப­தியும் தவறு செய்­துள்ளார். ஹேம­சிறி பெர்­னாண்­டோ­விற்கு அதி­கா­ரத்தை கொடுத்­தமை தவ­றாகும்.  

  அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு கொடுத்து பல நாடு­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­துக்­கொண்டோம். இந்­தியா, ஐரோப்­பிய ஒன்­றியம், ஜப்பான், அமெ­ரிக்கா ஆகிய அனைத்து நாடு­களும் ஒரு அணி­யாகி இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்­டன . இலங்­கைக்குள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தவும் இதுவே காரணம். சோபா உடன்­ப­டிக்­கையை இலங்­கைக்குள் கொண்­டு­வர அமே­ரிக்கா முழு­மை­யாக முயற்சி எடுத்­தது. இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­புகள் அனைத்தின் உரு­வாக்­க­தா­ரிகள் அமெ­ரிக்கா மட்­டு­மே­யாகும். அவர்­களை கொண்டு அமெ­ரிக்கா இயக்­கி­ய­மைக்கு அமை­யவே இலங்­கையில் ஈஸ்டர் தாக்­குதல் இடம்­பெற்­றது என்­பதே உண்மை. அதேபோல் தேசிய பாது­காப்பு விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்சி பல­வீ­ன­மா­கி­விட்­டது. ஐக்­கிய தேசிய கட்­சி­யினால் தேசிய பாது­காப்பை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள 13 அம்சக் கோரிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­வை­யாகும். இவர்கள் தொடர்ச்­சி­யாக நாட்­டினை குழப்பும் துண்­டாடும் நோக்­கத்தில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றனர். ஐக்­கிய தேசிய கட்சி இன்றும் ஆட்­சியில் உள்­ள­மைக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பே காராணம். ஆகவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் அனைத்து கோரிக்­கை­க­ளுக்கும் ஐக்­கிய தேசிய கட்சி தலை சாய்க்கும். சிறு­பான்மை கட்­சி­களின் ஆத­ரவை பெரும் கட்­சிக்கு இம்­முறை வெற்றி கிடைக்கும் என கூற முடி­யாது. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்­தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு இல்லாது மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெற்றார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானித்தது உண்மையாகும். ஆனால் இம்முறை பெரும்பான்மை வாக்குகளில் கோத்தாபாய ராஜபக் ஷ வெற்றி பெறுவார். இதில் கிறிஸ்தவ மக்களின் முழுமையான வாக்குகள் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என்றார்.

2 comments:

  1. அனைத்திலும் கடந்த நான்கு வருடங்களாக தாங்களும் இருந்து அனுபவித்து விட்டு இப்போ மட்டும் என்ன ஒரு பேச்சு.

    ReplyDelete
  2. நீயெல்லாம் பேச வந்துட்டே. கொடுமை

    ReplyDelete

Powered by Blogger.