Header Ads



2 வது விருப்பு வாக்கிற்கு பெறுமதி ஏற்பட்டுள்ளது, வெற்றிபெற வேண்டியது யாரென தீர்மானியுங்கள்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சிந்திக்க வேண்டியது, யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது யார் என்பது பற்றி அல்ல எனவும் வெற்றி பெற வேண்டியது யார் என்பது பற்றியே சிந்திக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

1982ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தலாக இம்முறை தேர்தல் மாறியுள்ளது. 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் பற்றி பேசப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்தன, கொப்பேகடுவ மற்றும் ரோஹன விஜேவீர பற்றி பேசப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் இருந்த போதிலும் இவர்கள் மூன்று பேர் பற்றியே பேசப்பட்டது.

இதன்பின்னர் மூன்று பேர் பற்றி தற்போதே பேசப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் போது யார் வெற்றி பெறுவார் என அனுமானிக்க முடிந்தது. இம்முறை அப்படி அனுமானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இம்முறை மும்முனை போட்டியில் எவருக்கும் 50 சத வீத வாக்குகளை பெற முடியாது என்ற அரசியல் நிலைப்பாடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிகமான வாக்குகளை பெறும் வேட்பாளருக்கு 50 வீத வாக்குகளை பெற முடியாது என கூறப்படுகிறது.

இதனால், இரண்டாவது விருப்பு வாக்கிற்கு பெறுமதி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இப்படியான நிலைமை இருக்கவில்லை. தற்போது அவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.