Header Ads



SLMC, சஜீத் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள புரிந்துணர்வின் முக்கிய அம்சங்கள்


- ஏ.எல்.தவம் -

👉🏿 இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இனரீதியிலான நெருக்குவாரம்
👉🏿 அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் காணி விவகாரங்கள்
👉🏿 கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம்
👉🏿 தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக / பிரதேச சபை பிரச்சினைகள்
👉🏿 பொத்துவில் மண்மலை தொடர்பான தவறான பரப்புரைகள்
👉🏿 மாகாண சபை முறைமை மாற்றம்
👉🏿 உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட நடைமுறை சிக்கல்களுக்கான தீர்வு
👉🏿 வட மாகாண முஸ்லிம்களின் இழப்பீட்டு மதிப்பீடு
👉🏿 வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்
👉🏿 வட மாகாணத்தில் குடியேறி இருப்பவர்களுக்கான உட்கட்டுமான மற்றும் பொதுச்சேவைகள் மேம்பாடு
👉🏿 வட மாகாணத்திற்கான அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு
👉🏿 கிழக்கு மாகாண நிலப்பங்கீட்டில் முஸ்லிம்களின் தற்கால நிலையும் எதிர்கால முன்னெடுப்புக்களும்
👉🏿 அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களில் இன விகிதாசாரம் பின்பற்றப்படல்
👉🏿 வட - கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் பிரதேசங்களில் கட்சி சார் அரசியல் புறக்கணிப்பு
👉🏿 ஏறாவூர் புன்னக்குடாவில் இராணுவ முகாம் அமைப்பதற்கான முஸ்தீபுகள்
👉🏿 கொழும்பு முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட பிரச்சினைகள்
கடந்த 02.10.2019 ஆம் திகதி ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவிற்குமிடையில் கொழும்பில் நடந்த சந்திப்பில் - மேற்கூறிய அம்சங்கள் தொடர்பில் சமூகப் பொறுப்புடன் ஆராயப்பட்டு - அவற்றிற்கான தீர்வுகள் எவ்வாறு அமைய வேண்டுமென்ற புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்தகால அரசாங்கங்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர் - முஸ்லிம்களை எவ்வாறு கைவிட்டனர் என்பதை வெளிப்படையாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரினால் - சஜீத் பிரேமதாசவின் முகத்திற்கு நேரே கூறப்பட்டு - இரு தரப்பினருக்குமிடையில் இப்புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில், தனது தந்தையை ஜனாதிபதியாக்கி; நம்பிக்கையில்லா பிரேரனையில் காப்பாற்றிய கட்சியையும் தலைமையையும்; தனது தந்தை மரணிக்கும் வரை நன்றி மறக்காமலிருந்ததை போன்று - தன்னை வேட்பாளராக்கி; ஜனாதிபதியாக்கும் கட்சியையும் இன்றைய தலைமையையும் தனது மரணம் வரையும் மறக்கவோ; ஏற்படுத்திக்கொண்டுள்ள புரிந்துணர்விற்கு மாற்றம் செய்யவோ மாட்டேன் என்று எல்லோர் முன்னிலையிலும் பிரமானம் செய்தார்.

கடந்த காலத்தில் இவ்வாறான புரிந்துணர்வுகள் ஏற்படுத்திக்கொள்ளும் போது உடனிருந்த அனுபவத்தில் - இத்தனை வெளிப்படையான உறுதி மொழியையோ பிரமானத்தையோ அதிகாரத்திலிருந்த/ அதிகாரத்திற்கு வரவிருந்த தலைமைகளிடம் கண்டதில்லை. கேட்டதுமில்லை.

அவரின் ஸ்டைலே இதுதானாம். நிபந்தனைகளை விட - புரிந்துணர்வில் ஏற்படும் உடன்பாடுகளை காப்பாற்றுவதில் எப்போதும் கவனமாக இருப்பவராம். அதேபோன்று இன்னொருவர் கூறியதற்காக, வாக்களித்த விடயங்களை மாற்றிக்கொள்பவராக அவரில்லையாம். வெட்டொன்று துண்டு இரண்டு என்ற வெளிப்படைத்தன்மையானவராம். பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

  1. சொல்றாங்க ஆனால் ஒண்டுமே நடக்காது

    ReplyDelete

Powered by Blogger.