Header Ads



இஸ்திஹாரின் தீர்மானத்தை அக்குரணை, முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கிறார்களா..?

- Safwan Basheer -

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்குரனையில் ஒரு புதிய சுயேட்சைக் குழு களமிறங்கியது.
தேசிய கட்சிகளையும், அக்குரனையின் கடந்த கால அரசியல் பிழைகளையும் விமர்சித்துக் கொண்டு ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை
அக்குரனையில் உருவாக்கப்போவாதகவும்,
பிரதேச சபையை தம்மிடம் ஒப்படைக்குமாறும்
பிரச்சாரம் செய்தார்கள்.
"நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு"
என்ற தொனிப்பொருளில் இயங்கிய இந்த இயக்கத்தின் பக்கம் அக்குரனையில் ஒரு புதிய
அலை உருவானது.
தேர்தல் முடிவுகளின்படி ஒட்டக சின்னத்தில்
போட்டியிட்ட PMJD என்ற சுயேட்சைக் குழு
கனிசமான வாக்குளைப்பெற்று ஒரு தொகுதியில்
வெற்றி பெற்றதுடன், போனஸ் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.
அதிஷ்டவசமாக PMJD யில் போனசில் சபைக்கு வந்த ஒருவருக்கு பிரதேச சபைத் தலைவராகும் வாய்ப்பும் கிடைக்கிறது.
ஒரு பிரதேச சபைத் தலைவர் என்ற வகையில்
பல காத்திரமான வேலைத் திட்டங்களை இஸ்திஹார் முன்னெடுத்துச் சென்றார், 
அவைகளைப் பாராட்டியே ஆகவேண்டும்.
இவர்கள் பிரதேச சபைக்கு வந்த வரலாறு இப்படி
இருக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 
தாம் கோட்டாவை ஆதரிக்கப் போவதாக
அறிவித்து இருக்கிறார்கள்.
அதற்காக இஸ்திஹார் சொல்லும் காரணம் 
சிறுபிள்ளைத் தனமானது

1. மார்கட் பில்டிங் கட்டித் தரனும்

2. வெள்ளத்த தடுக்கனும்

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதிக்கு ஆதரவளவு 
வழங்க எங்கள் அரசியல் வாதிகள் வழங்கியிருக்கும் கோரிக்கையின் பெறுமானத்தையும்,அவர்களது 
குறுகிய சிந்தனையையும் பாருங்கள்.
இந்த கோரிக்கைகள் மத்திய மாகணசபைத் தேர்தலில் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்குக்கூட பொருத்தமற்றது.
முழுக்க முழுக்கு இனவாதிகளைக்
கொண்ட ஒரு முகாம்.
முஸ்லிம் எதிர்ப்பை மட்டுமே தமது அரசியல் மூலதனமாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சிக்கு
ஆதரவு வழங்குவதற்கு இஸ்திஹார் குழு எடுத்த முடிவும்,விடுத்த கோரிக்கையும் படு பயங்கரமானது.
இந்த முடிவு இவர்கள் அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் என்பதை நன்றாகவே மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
இவர்கள் சஜித்தையோ,அனுரவையோ ஆதரித்து
இருக்க வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை.
குறைந்தது இவர்கள் ஆதரவு வழங்க ஒரு நியாயமான, முழு நாட்டின் முஸ்லிம் சமூகத்துக்கும் தாக்கம் செலுத்தக்கூடிய 
நான்கு நல்ல கோரிக்கைகளையேனும் 
முன்வைத்திருக்காலாம்.
ஜனாதிபதி வேற்பாளிரிடம் போய்
ஊருக்கு கட்டிடம் கட்டித்தா,கக்கூஸ் கட்டித்தா
என்று கோரிக்கை விடுத்துவிட்டு வந்து அதை பெருமையாக ஊடகங்களிலும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்திஹார் என்ற ஒரு நல்ல வியாபாரி
அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றுதான் 
இவ்வளவு நாளும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இவரும் ஒரு "அரசியல் வியாபாரி" என்பதை நிரூபித்து நிற்கிறது இவரது முதிர்ச்சியற்ற
இந்த அரசியல் தீர்மானம்.

6 comments:

  1. payanthuttaano teriyaathe pulla hazrathutta oathi paakkonum...!

    ReplyDelete
  2. akurana people should take correct decesion please? dont support gota,bymaking worng desision,dont do histroical fault, support for sajith

    ReplyDelete
  3. Every one for money and power.this 4people very atractive in the field

    ReplyDelete
  4. முதலில் அவர்களை மக்கள் நம்பி வாக்களித்தார்கள்.ஆனால் இந்த முறை அவர்கள் எடுத்திருக்கும் முடிவு பிழையானது.எனவே மக்களால் இறுதியில் நிராகரிக்கப்படுவார்கல்.

    ReplyDelete
  5. குண்டு சட்டிக்குள் குத்துக் கரணமடிக்கும் குறைப் பிரசவங்கள்!

    ReplyDelete
  6. எதன்மூலமாக இவர் ஆட்டுக்கவிக்கப்படுகிறார்- இவரின் இந்த முடிவுக்கு எவ்வளவு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதை அக்குறணை மக்கள் கூர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள்-முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்க முடியும்.
    மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.