Header Ads



அநுராதபுரத்தில் வாக்குறுதிகளை, அள்ளிவீசிய கோத்தாபய


ஜனாதிபதியானதும் நாட்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியானதும் முதல் வேலையாக சிறையில் அடைக்கப்பட்ட இராணுவத்தினர் உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு நிவாரணமாக இலவசமாக உரம் வழங்கப்படும். அனைத்து விவசாயக் கடன்களும் இரத்துச் செய்யப்படும் என அவர் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

நாட்டை தன்னிறைவடைய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்கான சிறந்த பொருளாதார முறைமைகள் எம்மிடம் உள்ளன.

இராணுவத்தில் பணியாற்றிய நான் நாட்டை ஆட்சி செய்வது ஆபத்து என பலரும் பிரச்சாரம் செய்கின்றனர். நாட்டை மீட்கும் போது என்னை நல்லவன் என்று போற்றினார்கள். தற்போது ஆபத்தானவன் என விமர்சிக்கலாமா?

சமகாலத்தில் நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. மூவின மக்களுக்கு தமது வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியிலுள்ள அரசாங்கம் இதனைதான் செய்துள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என, அனுதாரபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தர் பிரச்சார நிகழ்வில் கோத்தாபய தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Can Ethiopian change his skin, or the leopard his spot? Then Gota also do good, that are accustomed to do evil.

    ReplyDelete

Powered by Blogger.