Header Ads



முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம், முஸ்லிம்களை மறந்துவிட்டு நாட்டை முன்னேற்ற முடியாது

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையின் கீழ் அனைத்து முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வர்த்தகம் ஆகியவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் முஸ்லிம் மக்களை மறந்து விட்டு நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் இணைக்கக் கூடிய இனம் முஸ்லிம்கள் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. all muslim should belive allah, ,dont belive this rajpaksa regime ,after win election waiting for parliment election ,after getting majority then stat ethnic cleaning for miniority people ,

    ReplyDelete
  2. இந்த வார்த்தைகள் கோத்தாவின் வாயில் இருந்து வரட்டுமே

    ReplyDelete
  3. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பெயரில் தான் திகன,குபுக்கந்துற பள்ளிவாயலில் இரவுத் தொழுகை நிறைவேற்றிக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை ஆயுதப்படையைச் சேர்ந்த துவேசம்பிடித்த கைக்கூலிகள் முஸ்லிம் சகோதரர்களை வௌியில் இழுத்துப் போட்டு அடிஅடி என அடித்து சித்திரவதை செய்த கைங்கரியத்தைத்திட்டமி்ட்டவர்கள் ராஜபக்ச குடும்பம். தேர்தல் வரும்போது பாதுகாப்பல்ல.எங்கள் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்ெ காள்கின்றோம். பதவியில் இருந்து வௌியேற்றப்பட்ட போது உமது அமைச்சின் பொதுக்கணக்கில் இருந்த 4500 கோடி ரூபாவையும் முதலில் திருப்பி திறைசேரயில் ஒப்படைத்துவிட்டு பிறகு முஸ்லிம்களின் பாதுகாப்புபற்றி யோசிப்போம். அதுபோல் களவாடிய நாட்டின் பொதுச் சொத்துக்களைத் திருப்பி அரசாங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.