Header Ads



பசிலிடமிருந்து பறந்த உத்தரவு - ஹக்கீம், ரிசாத்திற்க்கு எதிரான கருத்துக்களை வெளியிடாதீர்

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீனுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளர்.

ஆளும் கட்சியின் அமைச்சர்களாக அவர்களை விமர்ச்சிக்கலாம், என்ற போதிலும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மேற்கொள்ளும் போது, அவதானமாக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றாலும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பட்சத்தில், முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலையை உருவாக்கிக்கொள்ள கூடாதென பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்தாலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை என்பதனால் ஹக்கீம் மற்றும் ரிசாத்திடமுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது கட்டாயமாகும் என பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய விமர்சனம் செய்வது பிரச்சினை இல்லை என்றாலும், பாரிய பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்துவதனை தவிர்க்குமாறு பசில் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

2 comments:

  1. அய்யா உலமா கட்ச்சி தலைவரே! திரு.பசில் அவர்களின் கணக்குப்படி அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டால், ரிசாட்,ஹக்கிம் ஆதரவை பசில் பெற்றால் உங்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்.300 விட வாக்கு உள்ள உங்களை உதைத்து வெளியே விரட்டுவார்கள்.

    ReplyDelete
  2. அப்போ பாராளுமற்றதில் பெரும்பான்மையை நிரூபிப்பதட்காக - கௌரவ ரிஷாட் அவர்கள் மேலும் கௌரவ ரவுப் ஹக்கீம் அவர்களும் துணை போக வில்லையானால் என்ன கதியாகும் என்பதை இப்பவே மிரட்டாமல் மிரட்டுகிறார்கள் போலும்.
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்-07

    ReplyDelete

Powered by Blogger.