October 28, 2019

ஜனாதிபதி வேட்பாளர்களிடம்,, வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் கோரிக்கை

முப்பது வருட யுத்தம் நாட்டின் பல்வேறுபட்ட இழப்புக்களுக்கும் தியாகத்திற்கும் மத்தியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மக்கள் கௌரவமாகவும் தன்மானத்துடனும் அவரவர் கலாசார மரபுகளைப்பேணவும் ஒற்றுமையுடன் ஜனநாயக மரபுகளைப்பேணி வாழ்வதறகாக  நடைமுறையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் நாட்டின் தேசியபாதுகாப்பை உறுதிப்படுத்தி கௌரவமாக மக்களை பாதுகாக்க வேண்டிள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை அரசுசெய்து வரும்  இந்த நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறுபட்ட மீள்கட்டமைப்பு புணருத்தான நடவடிக்கைகளையும் பல அபிவிருத்திகள் செயற்பாடுகளையும் மேற்கொண்டுவரும் நிலையில் குறிப்பாக வட புலத்திலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட யாழ் ,கிளிநொச்சி மாவட்ட முஸ்லீம்களின் விடயம் மந்த கதியிலேயே நடைபெற்றுவருவது வேதைனையான விடயமாகும்.

இதுவிடயமாக அரசாங்கம் தொடக்கம், அரசநிர்வாகிகள் , அரசியல் பிரமுவர்கள் வரையில் பராமுகமாகவும் காலம்தாழ்த்தியுமே  இருந்து வருகின்றார்கள். இற்றை வரையில் வழங்கிய வாக்குறுதிகள் ஏறாளம். எனவே  இம்மக்களின் விடியலுக்காக காத்திரமான அரசியல் தீர்வு நடவடிக்கைகளையும் முழுமையான மீள்குடியேற்றங்களையும் முழுமையான இழப்பீடுகளையும் வழங்கி வாழ்வாதார வசதிகளையும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து நிரந்தரமான தீர்வுகிடைக்க செய்யுமாறு  கௌரவ ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஈடுபடும் வேட்பாளர்களை வடக்கிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட யாழ் கிளிநொச்சி சிவில் சமூகம் சார்பாக வேண்டுகின்றோம்.  

வடக்கு முஸ்லீம்கள் எதிர் நோக்கிவரும் பிரச்சினைகளும் சவால்களும் வருமாறு          

1 )பல்லின சமுதாயங்கள் வாழும்   இத்தாய்த்திருநாட்டில் அவரவர் மதங்களையும் மதகலாசார வழிமுறைகளை கௌரவமாகவும் தனித்துவமாகவும் பேணிவாழ்வதுடன் சகோதர இனமக்களுடன் அன்பாகவும் கண்ணியத்துடனும் வாழ வழிசெய்து நடைமுறைப்படுத்தல்.            

2 )நாட்டின் இறைமைக்கும் பாதுகாப்பிற்குஏதுவாக சகல இனமக்களுக்கும் உரிய பாதுகாப்பையும் சுதந்திரத்தையைும் வழங்கி உத்தரவாத மளித்தல்             

3 )அரசியல் தீர்வுத்திட்டத்தில் உரியவாரான  நிரந்தரமான காத்திரமான தீர்வுகளையும் நீதமாகவும் நீதியாகவும் கிடைக்கச்செய்தல்.    

4)ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லீம்களின் உண்மை நிலையைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்தல்.     

5 )வடக்கு முஸ்லீம்கள் இழந்த அனைத்து அசையும் அசையா சொத்துக்களுக்கான முழுமையான நஷ்டஈடும் உதவிகளயைும் வழங்கல்     

6 ) திட்டமிடப்பட்ட காத்திரமானதும் முழுமையுமான மீள்குடியேற்றத்துடன் வீடமைப்பு திட்டங்களையும் வழங்கி நடைமுறைப்படுத்தல்.                

7)அத்தியாவசிய அடிப்படை வாழ்வாதார வசதிகள் வழங்கப்படல். கல்வி , சுகாதார மருத்துவசதிகளையும் வழங்கல்          

8)அரசகாணிகளை வழங்கி மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல் 

9)மீள்குடியேற முடியாமல் தற்போது இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்து வரும்பகுதிகளில் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மீள்குடியேற்றதிட்டத்தை முழுமைப்படுத்தல்.               

10) வடக்கு முஸ்லீம்களுக்கு உரித்தான காணிகளை கிடைக்கச்செய்தலும் அவற்றுக்கா காணிப்பத்திரங்களை கிடைக்கச்செய்தலும் 

11)இற்றை வரையில் புத்தளமாட்டத்தினால்  தமதுமாவட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டு வதசதிகளை எமது மக்களுக்கு வழங்கிவரும்நிலையில் இம்மாவட்ட கிடைப்பனவுகளை இருமடங்காக்கி வழங்கி அதன்குறைகளை நிவர்த்தி செய்தல்          

 12 )நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் பேணுவதுடன் இன ஒருமைப்பாட்டையும் இனஐக்கியத்தையும் பேணிவாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தல்.    

13) மதங்களுக்கிடையிலான சகவாழ்வையும் நல்லுறவையும்பேண வாழ வழிசெய்தல்.     

14) சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக் கருதி புத்தள குப்பைத் திட்டத்திற்கு ஏதுவான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளல் 

.15)  பொருளாதார வசதியற்ற  வறிய குடும்பங்களுக்கான  சமூர்த்திக்கொடுப்பனவுகளையும், வயதானவர்களுக்கான அரச உதவிதொகைகளையும் கிடைக்கச்      செய்தல். 

எனவே முப்பதாவது வருடத்திலாவது வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லீம்களின் விடியலுக்காக கௌரவ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ள இத்தாய்திரு நாட்டின் பிதாமகனிடம் வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம். 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி சிவில் சம்மேளனம் சார்பாக  

 தலைவர் அப்தல் மலிக் 

செயலாளர் ஹஸன் பைறூஸ் 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம்.

1 கருத்துரைகள்:

100 thousands Muslims chased out from North, for the 28 years, no one took action and no one helped them except a few charities and some Muslim community people. A little bit of help has been given by government,
22 Muslim MPs must take some responsibility too: The successive governments have failed on these Muslims. 22 Muslims MPs have no influence or interest to help these Muslims. How many houses have been built for these Muslims. A few houses have been allocated not for all. With the help of Allah, these people have done their best to live in different part of the country with little help from our community. With the help of Allah northern Muslims are doing well. Please help those poor to relocate in North.

Post a comment