Header Ads



திரைமறைவில் கட்சித் தாவல், பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலையில் பல அரசியல் கட்சி மாறல்கள் தொடர்பாக திரை மறைவில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இரண்டு பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மூன்று பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினத்திற்கு முன்னர் தீர்மானத்தை எடுப்பார்கள் என பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பேர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்வதில்லை என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு வந்த குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்த சமரசிங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.