Header Ads



பகிரங்க விவாதத்திற்கு வரும்படி, சஜித்திற்கு அழைப்பு

நாட்டின் பொருளாதாரம் சம்பந்தமாக எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வு பிரிவு இன்று -03- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கோ, பிரதமருக்கோ, சபாநாயகருக்கோ, பொறுப்பை நிறைவேற்றும் அரசாங்கமாக மக்களுக்கு உறுதிமொழியை வழங்க முடியாது.

தேர்தலை இலக்கு வைத்து பணத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான நடவடிக்கைகளால் நாடு முன்னோக்கி செல்ல முடியுமா?.

இது சம்பந்தமாக மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல எதிர்பார்த்துள்ளேன்.

அமைச்சர் ஒருவர் எந்தளவுக்கு பரிசுத்தமான காரியமாக இருந்தாலும் சட்ட ரீதியான அனுமதியில்லாமல் பணத்தை பகிர்ந்தளிக்க முடியாது. இப்படியான விடயங்களால், பிணையின்றி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.