Header Ads



வீடியோ கேம் விளையாடியும் வருமானம், பெற முடியுமென இளையவர்களுக்கு கூறுங்கள் - கோட்டாபய


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று -03- சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸ முதலில் வருகை தந்ததுடன், அவர் வரவேற்கப்பட்டதை அடுத்து அங்கு உரையாற்றினார்.

தனது உரையில் அவர் தெரிவித்ததாவது,

வறுமையிலிருந்து மக்களை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பில் ஆராய்கையில், பெரும்பாலான நாடுகளின் முறைமை குறித்து கவனம் செலுத்தினோம். சீனா வறுமையை எவ்வாறு ஒழித்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வருடம் சீனா எனக்கு விசேட அழைப்பொன்றை விடுத்தது. முருங்கை செய்கை மூலம் இன்று எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும். தர்பூசணியில் பழச்சாறு தயாரித்து அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பும் இளைஞர் ஒருவரை நான் சந்தித்தேன். இவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இன்று உலகில் காணப்படுகின்றன. எனது பாடசாலையில் ஒரு இளைஞரை நான் சந்தித்தேன். அந்த இளைஞர் வீடியோ கேம் விளையாடி, தமது நண்பருடன் அதனை இணையத்தில் பதிவேற்றி பாரியளவு தொகையை அறவிடுகின்றனர். உங்கள் வீடுகளிலும் இளையவர்கள் இருந்தால், வீடியோ கேம் விளையாடியும் வருமானம் பெற முடியும் என்பதை அவர்களுக்குக் கூறுங்கள்.

கோட்டாபய ராஜபக்ஸவின் உரை நிறைவடைந்ததை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நிகழ்விற்கு வருகை தந்தார்.

No comments

Powered by Blogger.