Header Ads



இலங்கை கிரிக்கட் அணி மீது, தீவிரவாத தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம்

இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இலங்கை கிரிக்கட் சபை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அறிவித்துள்ளது.

எனவே, பாதுகாப்பு நிலைமைகளை மீள் மதிப்பீடு செய்வதுடன், பாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப் பயணம் குறித்து மிகவும் கூடுதலான கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

6 comments:

  1. பாக்கிஸ்தானில் இது தினம் நடக்கும் சாதாரண நிகழ்வு

    ReplyDelete
  2. This could be plan to Distance SriLanka from Pakistan.

    As we know SriLanka used to keep close tie with Pakistan, especially in eradicating LTTE. BUT India does not want to see this closeness between SriLanka and Pakistan. So it seems they are plotting issue to distance SriLanka from Pakistan.

    ReplyDelete
  3. தினமும் இது போன்ற நிகழ்வுகளை கண்டு தைரியமானதால்தான் புலிப்பயங்கரவாதிகளை ஒரேயடியாக பாகிஸ்தான் விமானப்படையால் ஓளித்துக்கட்ட முடிந்தது

    ReplyDelete
  4. @Yaseer, பாக்கிஸ்தான் பயங்கரவாத்த்தினாலும் பஞ்சத்தினாலும் தின்றிக்கொண்டு இருக்கின்றது.
    ஆனால் நீங்கள் என்னெண்டால் இலங்கைக்கு யுத்தத்தில் உதவியதாக கற்பனை கதைகளை சொல்லுகிறீர்கள். அதுதான் 2012 யிலிந்து ஊர் ஊராக சிங்களவர்கள் உங்களுக்கு நல்ல அடி போடுகிறார்கள், உலகில் சும்மா இருந்து அடி வாங்கும் ஒரே இனம் நீங்கள் தான்.

    ReplyDelete
  5. Well if you have received intelligence alerts from India this time you have to take it with a bit of salt. But, when they told you about terrorist Zahran, you should have trusted them.

    ReplyDelete
  6. @ Yaseer. Very good reply to "PONNAYAN" Ajan

    ReplyDelete

Powered by Blogger.