September 05, 2019

16 வயதிலா, மத்ரசாக்களுக்கு மாணவர்கள் இணைக்கப்பட வேண்டும் - அநுரகுமார என்ன சொல்கிறார்...??

அநுரகுமார திசாநாயக்க – ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர்

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

அரபு மத்ரசாக்களுக்கான மாணவர்களை 16 வயதில் இணைத்துக்கொள்ள வேண்டும், குறைந்த வயது திருமணம் மற்றும் LGBT தொடர்பாக ஜேவிபி முன்வைத்துள்ள சில கருத்துக்கள் இன்று சமூக வலைத் தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் முஸ்லிம்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக நீங் கள் அவர்களுக்கு வழங்கும் பதில் என்ன?

நாட்டில் ஒரு பொதுவான சட்டமுள்ளது. அது போன்று அந்தந்த நாடுகளின் கலாசாரங்களுக்கு அமைவான பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் சட்டங்களும் உள்ளன. எனினும் எமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் எமக்கு மத்தியில் வேறுபாடுகள், வித்தியாசங்களை ஏற்படுத்துவதன் மூலமல்ல. ஒன்றுபட்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதன் மூலமாகும்.

எல்லா சமயங்களுக்கும் அந்தந்த சமயங்களைப் பின்பற்றுபவர்களுக்கு அந்தச் சமயத்தை பற்றி சரியான முறையில் போதிக்கின்ற உரிமையுள்ளது. இம்மதங்கள் குறித்து சரியான விளக்கங்களை அம்மக்களுக்கு வழக்க முடியாமல் போயிருப்பதன் மூலம் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்கிறது. நாடெனும் வகையில் ஒன்றாக நாம் முன்னோக்கிச் செல்கையில் எமக்கு மத்தியில் பொதுவான சட்டம் காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும் பாலானவர்கள் உள்ளனர் என்பதையும் நாம் மறுக்கக்கூடாது.

2 கருத்துரைகள்:

சிங்கப்பூர் மட்டுமல்ல பிரித்தானியா, ஜெர்மன், பிரான்ஸ் இன்னமும் எத்தனையோ நாடுகள் ஏன் துருக்கியையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் அந்தந்த நாட்டுப் பிரஜைகளாக இருப்பதனால் அங்கெல்லாம் அபரிமித வளர்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எமது நாடான இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் பௌத்தர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் பல பல இனத்தவரகளும் வாழ்வதனால் அவர்கள் இந்த நாடு யாருக்குச் சொந்தம்?; என்று "அடிபுடிப்" படுவதிலேயே தமது காலத்தை வீணாக கழித்துவிடுகின்றனர். சண்டையில் களைப்படைந்துவிடுவதினால் களைப்பைத் தீர்க்க மதுக் கடைகளையும் “விபசார நலன்புரி இல்லங்”களையும் நாடிச் சென்று வெறுங்கையோடு வீடு புகுகின்றனர். வீட்டில் பட்டனி. உடுத்த நல்ல உடுப்புகள் இல்லை. சொந்தபந்தங்களிடமும் எதுவும் கேட்க முடியாத நிலை. இவர்களை ஆட்டுவிப்பது மதகுருமாரும் அரசியல்வாதிகளுமே. இறுதியில் நல்ல மனிதர்களும் ரௌடிகளாக மாறும் மாற்றப்படும் சூழ்நிலை. சிங்கப்பூர் என்றால் சும்மாவா. அவர்கள் சிங்கப்பூரர்களாக இருப்பதனால் அந்த மாற்றம். நாங்கள்தான் இலங்கையர்களாக இல்லையே!

முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன, பள்ளிவாசல்கள் உள்ளன, பின்னர் ஏன் மதராஸ்கள் இங்கு?

மதராஸ்களும் ISIS வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருப்பதால் தான், அமேரிக்கா, சீனா, மற்பறும் பல மேற்கு நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், இலங்கை யில் ஊழல் அரசியல்வாதிகள் உள்ளதால், மதராஸ்கள் வளர்ச்சியடைகின்றன,

Post a comment