Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம், செய்யுங்கள் என நிபந்தனை விதிக்கவில்லை - EU பிரதிநிதிகள்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் இலங்கைக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்ற நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குறிப்பிட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் தெரிவித்தார். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்றுமுன்தினம் (26) நடைபெற்றது. 

இதன் போது ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் தான் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்ற நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு விடப்பட்டதா என கேட்டதற்கு அவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். 

முஸ்லிம் பெண்கள் 18 வயதுக்கும் குறைவான வயதில் திருமணம் செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிய போது இச் சந்திப்பில் கலந்து கொண்ட காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீன் விளக்கி கூறினார். 

18 வயதுக்கும் குறைவான வயதில் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்வதென்பது மிகவும் குறைவானதாகும். 

சிறுபான்மை மக்களுக்கெதிரான உரிமை மீறல்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான உரிமை மீறல்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன. 

இச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கெஸ் ஹொட்டன், தெற்காசிய நாடுகளுக்கான தலைமை அதிகாரி கரோலின் விநோத் உட்பட அதன் பிரதிநிதிகளும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.சி.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் உட்பபட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. அப்போ அவர்கள் நிபந்தனை விதிப்பதாக சொன்னது இந்த அரசின் கபட நாடகமா? பிரதமரின் தந்திரமா? இது உண்மையாக இருந்தால் இந்த அரசுதான் Muslim களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைத்த அரசாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.