Header Ads



கோத்தபாய ஜனாதிபதி, மகிந்த பிரதமர் இதனைவிட சிறந்த சமூகம் கிடையாது - டளஸ்

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது அதிகாரபூர்வமாக பிளவுக்கு உள்ளாகி இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை - மாலிம்பட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பல்வேறு கதைகளை கூறினார்கள். கோத்தபாய ராஜபக்சவுக்கு குடியுரிமையில்லை என தெரிவித்தனர்.

யார் என்ன கூறினாலும் ராஜபக்ச குடும்பத்தினர், கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து தரப்பினர் மற்றும் பொதுஜன பெரமுனவினர், பௌத்த சமய தலைவர்கள், புத்திஜீவிகள் என அனைவரும் கோத்தபாய ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என எதிர்பார்த்தனர்.

அந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், அனைவரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது கிராமங்களை தயார்ப்படுத்த வேண்டியது முக்கியமானது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல்வேறு மோதல்கள் காணப்படுகின்றன. அந்த கட்சியினர் தமது வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது நாடு முழுவதும் செல்கின்றனர்.

எனினும் பொதுஜன பெரமுனவுக்கு நம்பிக்கையான வேட்பாளர் கிடைத்துள்ளார். அனைவருக்கும் புரியும் ஒன்று இருக்கின்றது. அதுதான் என்னை விட கோத்தபாய நாட்டை அதிகம் நேசிக்கின்றார்.

எமது இதயங்கள் எம்மைவிட கோத்தபாய ராஜபக்ச நாட்டில் ஊழலை ஒழிப்பார் என்று கூறுகின்றன.

கோத்தபாய ஜனாதிபதி, மகிந்த பிரதமர் இதனை விட சிறந்த சுமூகம் மேலும் கிடையாது எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. கற்பனை உலகில் சஞ்சரிக்கும் இவனுகள், இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சிறகை இருகைப்புயங்களிலும் கட்டி கற்பனை உலகில் வலம்வர பறக்க முயற்சிக்கின்றான். இது கொலையும் கொள்ளையும் அடித்து இரவில் தூக்கமில்லாது அவையும் இவனுகளுக்கு ஸைகோபயோபியா எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு அங் கொடையில் ஸீரியஸான வார்ட்டில் அனுமதிக்கப்பட வேண்டிய ஜோக் நேயாளிகள்.

    ReplyDelete
  2. Say NO to family politics!!!

    ReplyDelete
  3. Say No to Current Criminal.
    2020 is for JVP or SDP ... New leader New Country..

    ReplyDelete

Powered by Blogger.