August 20, 2019

முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி, வேட்பாளராக களமிறங்க வேண்டும்

எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார்
என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றது.  எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­த­கை­யது என்­பதை வெளிக்­காட்டும் விதத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்தி அவ­ருக்கு ஒட்­டு­மொத்­த­மாக தமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும்.

இரண்­டா­வது வாக்கை முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை ஏற்று அதற்கு உத்­த­ர­வாதம் அளிக்கும் வகையில் செயற்­ப­டக்­கூ­டிய பிர­தான வேட்­பா­ள­ருக்கு வழங்­க­வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கையே சம­கால அர­சியல் போக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு சிறந்த பெறு­பேற்­றைத்­தரும் என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

சம­கால அர­சியல் நிலையில், ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் மிக­முக்­கி­ய­ வ­கி­பாகம் பெறு­கின்­றன. எனவே, முஸ்லிம் மக்கள் தமது ஒட்­டு­மொத்­த­மான 10 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களை எவ்­வாறு அளிக்கப் போகின்­றார்கள் என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தப் பொறுப்பை சரி­வர உணர்ந்து தமது பங்­க­ளிப்பைச் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

கடந்த காலங்­களில் நம்­பிக்கை நிமித்தம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­பாடுகள், உத்­த­ர­வா­தங்கள், ஒன்­றி­ணைந்த பங்­க­ளிப்­புகள் அனைத்தும் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாத­கங்­க­ளையும் ஏமாற்­றங்­க­ளை­யுமே ஏற்­ப­டுத்­தின. சமூ­கத்­துக்கு நன்­மை­ய­ளிக்கும் விட­யங்கள் எது­வுமே நடக்­க­வில்லை. ஒரு  அங்­கு­லக்­கா­ணியைக் கூட விடு­விக்க முடி­யாத நிலையும் சாதா­ரண  அர­சியல் அதி­கா­ரத்­தைப்­பெற்றுக் கொள்­ள­மு­டி­யாத அவ­ல­நி­லை­யுமே காணப்­பட்­டது.

இனியும் அதன் வழி­ந­டப்­ப­தற்கு நாம் முயற்­சிக்­கக்­கூ­டாது. முஸ்­லிம்கள் கோழை கள் அல்லர் என்­பதை நிரூ­பிக்கும் விதத்தில் நாம் எமது அரசியல் பாதையை வகுக்­க­வேண்டும். சமூ­கத்தின் தலை­வி­தியை எந்­த­ச­மூ­கமும் நிர்­ண­யிக்­கா­த­வரை அல்­லா­ஹு­த­ஆலா அதை­மாற்ற மாட்­டான்­ என்­கி­றது அல்­குர்ஆன். இதற்­கான சந்­தர்ப்­ப­மா­கவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமைந்­துள்­ளது. எனவே எமக்­கான ஒரு­வேட்­பா­ளரை நாம் களம் இறக்­க­வேண்டும். முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதில் கள­மி­றங்­கு­வா­ரானால் அதுவும் சிறப்­பா­னதே.

எமது அபி­லா­ஷைகள், கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைச் சரி­வர புரிந்­து­ கொண்டு- ஏற்­றுக்­கொண்டு அவற்­றுக்கு உறு­தி­யான முறையில் உத்­த­ர­வாதம் அளிக்­கக்­கூ­டிய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­பது முக்­கி­ய­மா­னது. எனினும் எமது ஒட்­டு­மொத்த  ஒன்­றித்த சக்தி எத்­த­கை­யது என்­பதை நாம் அவர்­க­ளுக்கு காட்­ட­வேண்­டி­யதும் அவ­சியம்.

எனவே, ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முஸ்­லி­முக்கு எமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும். பின்னர் எமது கோரிக்­கைகளை ஏற்றுக் கொண்ட வேட்­பா­ள­ருக்கு இரண்­டா­வது வாக்கை அளிக்­க­வேண்டும். காரணம் முஸ்லிம் வேட்­பாளர் பெற்­றுக்­கொண்ட அத்­த­னை­வாக்­கு­களும் மற்­றைய வேட்­பா­ள­ருக்கும் கிடைக்­கப்­பெற்­ற­தையும் இந்­த­வாக்­குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி செய்யவேண்டியதும் அவசியமானது.

இந்த முக்கியத்துவத்தில் எமது வகிபாகம் எத்தனை சக்திமிக்கது என்பதை எடுத்தி யம்பவே முஸ்லிம் தமக்கான ஒரு வேட்பா ளரை நிறுத்தி அவருக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளை முதலில் அளித்து தமது சத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்ப தை வலியுறுத்த விரும்புகிறேன்  என்றார்.

6 கருத்துரைகள்:

So we will vote to Muzammil Weerawansa.

இவ்வாறுதான் கடந்ந்த தேர்தலில் பேரம்பேசும் சக்தியாக மாறி வெளிப்படையாகவே எமது பலத்தால் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால்,முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை என்பது கண்கூடு.

இருப்பினும்,
கடந்த காலத்தின் படிப்பினைகளோடு வரும்காலங்களில் சிறந்த திட்டமிடல்கள் மூலம் சமூகத்தை வழிநடத்துவது வரவேற்கத்தக்கதே....

அல்லாஹ் முடிவு செய்ததை யாரால்தான் மாற்ற முடியும்.

What a fantastic idea
The former CM was one of the SLMC member who all supported the Present President without any agreement after the Postal votes.
His colleagues were in the Parliament and the Cabinet of RW.
All communal violence in their period from Ampara , Digana , Minuwangoda and the post Easter incidents against Muslims were just seen by them as onlookers.
They all acted in a drama of resignation and with the blessings of RW has reverted back.
Having Presidential councils in the party none had the the courage to go to courts against the Monk MP Athuraliya Thero but they were seen in the courts against the infamous case of Constitutional crisis of MR’s Premiership.
Now this gentleman wants to hand over all the Muslim Votes to the so called expected winning candidate and expecting miracles to happen from him because of his and his party’s demanding power.
At least have these people had any pain in their mind towards that lady who was arrested and detained for insulting the religion by dress from Mahiyangana.
Sir
Please stop your sermon and allow us to vote whoever we think a good candidate.

Muslims are not stupids enough to vote for a Muslim guy just because he is a Muslim.

As SLPP says, UNP and other potential candidates also declared that they don't want Muslim's vote with conditions attached, what are we going to do? Under present hostile condition, which leading candidate is going to enter in to an agreement with "Muslims" and face a unfavorable Sinhalese voters?. If we don't cast 2nd preference to any of the first two leading candidates, that vote will have no value in the 2nd round of counting.

Post a comment