August 18, 2019

சஜித் ஜனாதிபதியானால், முஸ்லிம்களை பாதுகாக்கும் தலைவராகதான் இருப்பார் - முஸ்லீம் வெறியாட்டம் அதிகரிக்கும் - கருணா

தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த  சரத் பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு  அன்று வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  சொன்னார்கள்.   ஆனால் அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஏன் வாக்களிக்க முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான); கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கட்சி காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) இடம்பெற்றது 

இதில் கலந்துகொண்ட கட்சி தலைவர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) கட்சியின் பெண்கள் அணிதலைவி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர்அணி தலைவர், தேசிய அமைப்பாளாகளுக்கான பதவிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்த பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஜனாதிபதி தேர்தலில் பொது ஜனபெரமுன கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். அதன் தெளிவாக்கல் கூட்டம் இன்று இடம்பெற்றதுடன் இறுதி தீர்மானமாக வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபகஷவை ஆதரிப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட  தற்கொலை குண்டு தாக்குதலினால் 200 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் இதனால் முதலாவதாக எங்களுடைய நாட்டினுடைய பாதுகாப்பு இன்று கேள்விக்குறியான அச்சுறுத்தில் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே இது போன்ற அச்சுறுத்தலிலிருந்து நாட்டை பாதுகாப்பது எங்களது முக்கிய கடமையாக இருக்கின்றது இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பல வாக்குறுதிகளை அள்ளிவீசியதால் மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் ரணிலாக இருக்கலாம் ஜனாதிபதி மைத்திரியாக இருக்கலாம் அவர்கள் வழங்கிய வாக்குறுதியில் ஒரு அரசியல் கைதியைக்கூட விடவில்லை. ஆனால் மாறாக அரசியல் யாப்பு திருத்தப்படும் வடக்கு கிழக்கிற்கான உரிமைகள் வழங்கப்படும் என கூறிக் கொண்டார்களே தவிர எதுவித வாக்குறுதிக் நிறைவேற்றப்படவில்லை 

இவ்வாறான அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து எமது தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளன.; இந்த ஏமாற்றிய அரசாங்கத்திற்கு இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

ஜக்கிய தேசிய கட்சி இன்று வரை வேட்பாளரை தெரிவு செய்யவில்லை இருந்தபோதும் சஜித் பிரேமதாஸாவை தெரிவு செய்வதாக தெரிவிக்கின்றனர் இந்த சஜித் முஸ்லீம்களை பாது காப்பதற்கான தலைவராக தான் இருப்பார்.

அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று இடம்பெறும் கூட்டங்களிலே பல முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர் ஆகவே தமிழ் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.

கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலே வெற்றியடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முஸ்லீம் முதல் அமைச்சரை உருவாக்கினர். இந்த முதலமைச்சர் காலத்தில் தான் கூடுதலான நிலங்கள் பறிபோகியுள்ளது  அதேவேளை தமிழ் மக்கள் வேலைவாய்ப்பையும் இழந்தார்கள். 

அதேபோல இன்றும் ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து கொண்டு  மீண்டும் முஸ்லீம்களிடம் கிழக்கு மாகாணத்தை கொடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கங்கனம் கட்டிநிற்கின்றனர் 

இன்று இதற்கு பல வியாக்கியானங்கள் கூறலாம்  கோத்தபாய யுத்ததிலே ஈடுபட்டவர் யுத்தகுற்றவாளி என கூறலாம். ஆனால் யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அன்று இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த  சரத் பென்சேக்காவிற்கு எதுவித முன் நிபநதனையும் இல்லாமல் வாக்களிக்கச் சொன்னவர்கள் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர். 

அவ்வாறான இராணுவ தளபதிக்கு வாக்களிக்கலாம் என்றால் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியாதா? யாராக இருந்தாலும் ஒரு சிங்களவர் தான் ஜனாதிபதியாக வரப்போகின்றார் எனவே தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நான் அன்டன் பாலசிங்கத்துடன் கலந்துகொண்ட காலத்தில் அன்டன் பாலசிங்கம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே வெளிப்படையாக தெரிவித்தார். ரணில் ஒரு குள்ள நரி என்று எனவே ரணில் ஒருபோதும் தமிழர்களுக்கு எதையும் செய்யமாட்டார்

அவர் அந்த நரித்தனத்தை தான் தற்போது காட்டிவருகின்றார் அவரின் பின்னால் நாங்கள் அணிதிரள்வோமாக இருந்தால் மீண்டும் எங்கள் தமிழ் பிரதேசங்கள் இழந்த பிரதேசங்களாக மாற்றப்படும் முஸ்லீம் அரசியல் ஆதிக்க வெறியாட்டம்  அதிகரிக்கும். 

எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தெளிவாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

5 கருத்துரைகள்:

Birds of a feather a killer for another killer

furkanhaj(AKP)says:- கருணா தமிழர்களுக்கு சொன்னாலும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று.வாழ்க கருணாஅம்மான் அவர்களே.

இந்த முறை கோத்தாவுக்கு கிடைக்கும் தமிழ் வாக்குகளை வைத்துதான் உன்னை தம்முடன் வைத்துக் கொள்வதா அல்லது துரத்தி விடுவதா என்பதை மஹிந்த தரப்பு தீர்மானிக்கும்.அதுமட்டுமல்ல கோத்தா ஜனாதிபதியாக வந்தால் கூட,உனது மாவட்டத்தில் அவருக்கு கிடைத்த வாக்குகளை வைத்துதான் மஹிந்த அணி உமது அரசியல் வாழ்வை தீர்மானிக்கும்.எனவே தமிழ் மக்களிடம் உனக்கு எந்த செல்வாக்கும் இல்லை.எனவே எதிர்காலத்தில் உனது அரசியல் பரிதாபத்துக்குரிய விடயமாகும்.உன்னை கோத்தா அரசியல் மேடையில் தன்னோடு வைத்துக் கொண்டால் கோத்தாவுக்கு கிடைக்க இருக்கும் Muslim வாக்குகளும் கிடைக்காமல் போய் விடும்.ஆக இப்போது நீ ஒரு அரசியல் தண்டச்சோரு.நீ கோத்தாவுக்கோ,சஜித்துக்கோ ஏன் மக்கள் விடுதலை முன்னணிக்கோ யாருக்குமே பயன் அற்ற ஒரு உப்பு இல்லா பண்டம்.

முதலில் உன்னால் கிழக்கில் கொல்லப்பட்ட Muslim மக்களுக்கு நீதி வேண்டும்.அண்மைய குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கல் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால் உன்னால் கொல்லப்பட்ட 2000 க்கும் அதிகமான குறிப்பாக சிறுவர்,பெண்கள் உட்பட Muslim களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.உன்னால் வெட்டியும்,சுட்டும் கொல்லப்பட்ட 200 அதிகமான பிக்குகலின் கொலைக்கு இன்னும் நீதி இல்லை.நீயே ஒரு கொலைகாரன்.நீ எவ்வாறு இப்படி பேசுவது.

Who killed 800 policemen and bus load of Bhikkus?

Post a Comment