August 24, 2019

முஸ்லிம்களின் கடைகளை எரித்தார்கள் - குறுகிய காலத்தில் இதற்கு எதிராக வெற்றி கண்டோம் - ரணில்

-ஒலுமுதீன்  கியாஸ் 

எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, இன, மத பேதமற்ற தேசிய சமூகம் ஒன்றை உருவாக்கி, இந்த நாட்டை சுவிசேஷம், சுபிட்சம் உள்ள தேசியமாக அனைவரும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின், அதிவேக நெடுஞ்சாலையில் காபர்ட் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (24) மூதூர் திரி டி சந்தியில்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தரையாற்றிய பிரதமர், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மறைந்த இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மகருப் உடன்  நான் இந்தப் பிரதேசத்துக்கு கடல் வழியாக வந்து,  வெறும் மணல் வீதியிலே பயணம் செய்தேன். ஆனால், இன்று தரைவழியாக வந்து, ஐ ரோட் கார்பட் வீதிக்கான அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

“இவ்வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான விசேட விமான சேவையை ஆரம்பிக்க உள்ளோம். இதற்காக இப்போது அதன் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“அதேபோன்று, உல்லாசப் பயணத்துறை விருத்தி செய்வதற்காக, மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி  செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கடன் வழங்குவதற்கு கூட எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனால், கடந்த மூன்று வருட காலத்துக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் போதுமான நிதியை வரவழைத்துக் கொண்டோம்.

21க்கு பிறகு நாடு அழிந்து விடும் என்று கற்பனை கதை ஒன்றை பொது எதிரணியினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.  பாடசாலைக்கு மாணவருக்கு செல்ல வேண்டாம் என்றும் முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம் என்றும் கூறி முஸ்லிம்களின் கடைகளை எரித்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில், இதற்கு எதிராக வெற்றி கண்டோம் எனவும் கூறினார்.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு குண்டு வெடித்தால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும். ஆனால் இந்த நிலைமையை மாற்றியமைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

9 கருத்துரைகள்:

WHY DID NOT THIS PRIME MINISTER SET-IN-MOTION A PRESIDENTIAL COMMISSION TO INQUIRE INTO THE VIOLENCE THAT TOOK PLACE IN ALUTHGAMA AND BERUWELA NO SOONER THE "YAHAPALANA" GOVERNMEN CAME TO POWER, WHICH WAS PROMISED DURING THE PRESIDENTAIL AND GENERAL ELECTIONS OF 2015. THAT IS BECAUSE MINISTER RAJITHA SENERATNE AND SOME YAHAPALANA POLITICIANS WERE SUSPECTED TO BE BEHIND THE VIOLENCE IN ALUTHGAMA/DARGATOWN AND BERUWELA. RAJITHA LEFT THE ISLAND AROUND THE 12th-13th., OF JUNE 2015 AND RETURNED A FEW DAYS AFTER THE VIOLENCE CARMED DOWN. THIS PRIME MINISTER(RANIL) IS LYING TO THE MUSLIMS TO PREVENT THE MUSLIMS FROM VOTING GOTABAYA RAJAPAKSA AT THE NEXT PRESIDENTIAL ELECTIONS.
Noor Nizam - Convener "The Muslim Voice".

நாடகத்தின் கதாநாயகனுக்கு முடியாது ஏதும் உண்டோ....

This is too too much Mister Ranil,,, You did not find solution for the burning of Muslims shops in Kurunagala or any other place.. How come openly you are lying this way.

Did you punish any of them for such violence that conducted during the state of emergency situation? Rather most of them got released immediately. BUT many innocent Muslim were arrested under state of emergency law and under strict laws (only applied to Muslims) for holding Arabic Quran or Books even. Even till today no compensation paid to Kurunagala and Minuwangoda Muslims for their loses ... But openly lying this way..

We are no more going to foll into the same pit any more.

In My opinion... If you keep silent,, you may get some votes of ignorant Muslims but If you open your mouth lying this way... You may lose that also.

We Love Peace for All Citizens and a Strong Leader Who can take decision firmly.

Atleast don't you feel shy to talk about this?

Avargal erithaargal ivar kilithaar

Noor ... that incident done by Singala this one done by Muslim that is why he went deep sleep

He just destroyed the grand old UNP party and opened the way for MR & Co.

Human should be shyness but r....

No Humanity...it was death...shame...for prime minister.....

Post a Comment