Header Ads



17 ஆம் திகதி இறுதி முடிவு - பங்காளிகள் கையெழுத்திடுவதும், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி குறித்து எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படுமென என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு (13) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது உதயமாகவுள்ள புதிய கூட்டணி குறித்த விவகாரத்தை கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேற்றிரவு இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தையடுத்த கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மனோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றிரவு நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழு எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை கூடுகின்றது.

குறித்த உபகுழு கூட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். அத்துடன், கூட்டணியை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் திகதியும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் தீர்மானம் எடுக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளிக் கட்சி தலைவர்கள்  கையெழுத்திடுவதும்,  கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. UNP வேட்பாளரை அறிவிக்கும் முன் தேர்தலும் முடிந்துவிடும்.சஜித் போல கோத்தாவுடன் போட்டி போடக்கூடுய வேறு யாரும் இல்லை.சஜித்தை களமிரக்க திரு.ரனிலுக்கு விருப்பமில்லை.பேய் ஒன்னு இந்த நாட்டை ஆண்டாலும் பரவாயில்லை,தனது UNP யின் தலைவர் எனும் பதவி பரிபோய் விடும் எனும் பயத்தினால் ரனில் காட்டும் அரசியல் விளையாட்டை அனைத்து Muslim,Tamil கட்சிகலும் இன்னும் புரியாமல் முட்டாள்கலாக இருக்காமல் நல்ல ஒரு முடிவை எடுங்கள்.

    ReplyDelete
  2. திரு.மனோ,ரிசாட்,ஹக்கிம்,பழனி திகாம்பரம் போன்ர பங்காளிக் கட்சிகள் முதலில் ரனிலுக்கு அழுத்தம் கொடுங்கள்.சஜித் இல்லாவிட்டால் உங்கள் ஆதரவை விலக்கி கொள்வதாக.இல்லாவிட்டால் தனது கட்சி தலைமையை தக்க வைக்க வீதியால் போகும் ஒருவரை களமிரக்கவும் ரனில் தயங்கமாட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.