Header Ads



பதுளைக்கு கோத்தபாய வந்தால், 125 கிலோ எடைகொண்ட நான் தலைகீழாக நிற்பேன் - சாமர சம்பத்

பதுளையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்திற்கு கோத்தபாய வந்தால், நகரில் உள்ள மணிக் கூட்டு கோபுரத்திற்கு எதிரில் 125 கிலோ எடை கொண்ட தான் தலைகீழாக நிற்க போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபையில் இன்று -23- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பதுளையில் உள்ள தோற்றுப் போன அரசியல்வாதி ஒருவர், கோத்தபாய வருகிறார் என அனைத்து இடங்களிலும் தட்டிகள், சுவரொட்டிகளை ஒட்டி மக்களை வரவழைக்க பார்க்கின்றார். கோத்தபாய வந்தால் பரவாயில்லை.

31 ஆண்டுகள் தோல்வியான அரசியலில் ஈடுபட்டு, தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு சென்று, தேர்தல் நெருங்கும் போது மீண்டும் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதியால், பொதுஜன பெரமுனவின் பதுளை அமைப்பினருக்கு கேவலாமாம். அவரது வேலைகள் தமது கட்சியின் எதிர்காலத்திற்கும் பாதிப்பு என பதுளையை சேர்ந்த பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர்.

பதுளையில் நடக்கும் கூட்டத்திற்கு கோத்தபாய வர மாட்டார். அவர் வருகிறார் என மக்களை இந்த அரசியல்வாதி ஏமாற்றி வருகிறார்.

நாங்கள் எப்போதும் கட்சியுடன் இருந்தோம். கட்சியோ, தலைவரோ எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு பணியாற்றுவோம். பின் கதவால் வேறு கட்சிகளுக்குள் செல்ல மாட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. கட்சி ஒரு தீர்மானத்தை எடுக்கும். அந்த தீர்மானத்திற்கு நாங்கள் கட்டுப்படுவோம். தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் பதுளை மக்கள் வழங்க போகும் தீர்ப்பை பார்க்க காத்திருக்கின்றோம் எனவும் சாமர சம்பத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ள, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, பதுளையில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்திற்கு கோத்தபாய வருகிறார் என நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.