Header Ads



சாதித்துக்காட்டி விட்டு ஓய்வுபெற்ற, மட்டக்குழி சேர் ராசிக் பரீட் மகளிர் கல்லூரி அதிபர் நூர் நலீபா அப்துல் சலீம்


பெயர் : நூர் நலீபா அப்துல் சலீம்.
பிறப்பிடம் :அஸீஸ் தோட்டம், எகலியகொட.
கல்வி கற்றது : கொ. முகத்துவார ஹம்சா கல்லூரி, கொ. விவேகானந்தா கல்லூரி
பல்கலைக்கழகம் : பேராதனை 1978 - 1981
கணவர் : அப்துல் சலீம். (ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மூதுாா்)
ஆசிரிய சேவையில் முதல் நியமனம் : 01.01.1984 மூதூர் மத்திய கல்லூரி
பிள்ளைகள் : 1.நஸ்ஹத் சதீலா, (பட வரைஞர்)
2.பாத்திமா ஷகீலா, (நியுஸிலாந்து) விரிவுரையாளர் ராகம வைத்திய பீடம்
மருமக்கள் : இர்ஷாத் அபூ உபைதா, )
அஹமட் மொஹிதீன் முதஸ்ஸிர்,நியுஸிலாந்து)
மட்டக்குழி சேர் ராசிக் பரீட் மகளிா் கல்லுாாியின் அதிபராக 2012ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக இப் பாடசாலையில் வரலாறு காணாத கல்வி அபிவிருத்தியையும் வளரீதியான அபிவிருத்தியையும் எற்படுத்தினார்.
ஆண் பெண் கலவன் பாடசாலையாக இருந்தால் உயா்தரத்திலும் .க.பொ.தரத்திலும் மாணவ மாணவிகள் கல்வி வீழ்ச்சியடையும் ஆகவே மட்டக்குழி சேர் ராசீக் பரீட்டை மகளிா் கல்லுாாியாகவும், மட்டக்குழி கம்சா கல்லுாாியையும் ஆண்கள் கல்லுாாியாகவும் மாற்றியமைத்தாா்.
குறிப்பாக 2013ம் ஆண்டில் உயர்தர கலைப்பிரிவையும் 2014ம் ஆண்டில் வர்த்தக பிரிவையும் ஆரம்பித்தார். இந்த குறுகிய காலத்திற்குள் சுமார் 14 பேரளவில் பல்கலைகளகங்களுக்கு தெரிவாகினர். அதுமட்டுமல்ல இவருடைய காலப்பரிவில் மூன்று மாடிக்கட்டிடங்கள் இரண்டை கட்டி முடிக்க இவர் அயராது உழைத்தார்.
பல கோடிக்கான அபிவிருத்திகள் கல்வி ரீதியான முன்னேற்றங்கள் இவையனைத்தையும் அடைவதற்கு என்னதான் அரசியல் பிரமுகர்களும் படசாலை உப குழுக்களும் உதவினாலும் திட்டமிட்டாலும் அதை களத்திலே நின்று நடைப்படுத்துவதற்கு ; அதிபர் நூர் நலீபா சலீமின் பெயர் வரலாற்றில் பதியப்படும்
இன்று ஒழுக்கமும் திறனும் மிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கற்கின்ற ஒரு பாடசாலையாக மிளிர்கின்ற ஒரு கல்விக்கேந்திர நிலையமாக இப் பாடசாலையை மாற்றிய பெருமை அதிபர் திருமதி நூர் நலீபா சலீம் அவர்களையே சாரும் .. தனது சேவைக்காலத்தில் பாடசாலையில் அதிக நேரத்தை செலவழித்து தன்னலம்பாராது உழைத்து தனது அறுபது வயது பூர்த்தியில் ஓய்வு பெறுகிறார்.
.-கல்விக்கு உதவி செய்பவா் என்றும் மரணிப்பதில்லை -
கற்பவனாக இரு, அல்லது கற்றுக் கொடுப்பவனாக இருஅல்லது கற்பவனுக்கு உதபுவனாக இரு ஆனால் நான்காவது ஆளாக இராதே

Ashraff A Samad

3 comments:

  1. May Almighty accept her services.

    ReplyDelete
  2. She has done it for Muslim community. May almighty Allah accept her remarkable services! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.