July 02, 2019

முஜிபுர் ரஹ்மானுக்கு, ரதன தேரர் பதில்

புலம்பெயர் தமிழர்களின் தேவையை தான் நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி சம்பந்தமாக அத்துரலியே ரதன தேரர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் புலம்பெயர் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது என முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியிருந்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மேலும் முஜிபுர் ரஹ்மான்,

அத்துரலியே ரதன தேரர் புலம்பெயர்ந்தோருக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். நாட்டில் உள்ள எதிலும் அவருக்கு நம்பிக்கையில்லை.

புலனாய்வு பிரிவினர் மீது நம்பிக்கையில்லை. மருத்துவர்கள் மீது நம்பிக்கையில்லை, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை. புலம்பெயர்ந்தோரும் இதனையே கூறுகின்றனர்.

ரதன தேரர், புலம்பெயர் தமிழர்களுடன் கூட்டணியை அமைந்துள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டணி நாட்டுக்கு எதிரான கூட்டணி. தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொண்டு, தேசப்பற்று என்ற ஆடையை அணிந்துக்கொண்டு, சிங்கள, தமிழ் அமைப்பு என்று அமைப்பை ஆரம்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

புலம் பெயர் தமிழர்களுடன் இணைந்து கூட்டணியை அமைத்து, நாட்டின் நீதித்துறை, பொலிஸார் மற்றும் மருத்துவர்களுக்கு சவால் விடுத்து வருகிறார். இதன் மூலம் நாடு சர்வதேச ரீதியில் பெற்ற வெற்றியை மறுபக்கம் திரும்பும் வகையிலேயே ரதன தேரர் செயற்பட்டு வருகிறார் என முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டிருந்தார்.

முஜிபுர் ரஹ்மானின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அத்துரலியே ரதன தேரர், தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி வருவதாக கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக முஜிபுர் ரஹ்மான் கூறுகிறார். முஸ்லிம் அடிப்படைவாதம் காரணமாக சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பறை, வவுனியா போன்ற இடங்களில் உள்ள தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் பொதுவான முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் பாதிக்கப்பட்டுள் சகல தமிழ் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் போராடி வருகிறோம். இந்து மற்றும் பௌத்த மக்கள் ஒரு முன்னணிக்கு வந்துள்ளனர் என்பதை நான் மிகவும் தெளிவாக கூறி வைக்க விரும்புகிறேன்.

நான் யாழ்ப்பாணத்தில் 10 ஆண்டுகள் 14,000 தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்துள்ளேன். இதன் மூலம் கிடைத்த சக்தியை பயன்படுத்தி சிங்கள, தமிழ் ஒற்றுமையை கட்டியெழுப்புவது என தேசிய கடமை. வஹாபிசம் இலங்கையில் செயற்பட்டு வருகிறது.

குடும்ப கட்டுப்பாடு மற்றும் சிங்களவர்களின் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகள் நாட்டில் நடந்து வருகிறது. இதனால், இஸ்லாமிய அடிப்பவாதத்தை தோற்கடிக்க சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் இணைந்த ஒரு முன்னணியை உருவாக்குவேன் என அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

9 கருத்துரைகள்:

அத்துரலிய ரத்ன தேரரின் திடீர் பாசமும் எப்போதும் காட்டி குடுக்கும் முஸ்லிம்களின் குணமும் தமிழர்களுக்கு நன்மை பயக்காது.

தாங்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கும் பிச்சனைக்குள் ஏன் இந்த இனவாதி புலம்பேர் தமிழ்ர்களை உள்ளே எடுத்தார்?

எனினும், ரத்ன பிக்கு சார் இந்த இனவாதிக்கு தக்க பதிலை கூறியுள்ளார்

ஐயா அதுரலிய ரத்ன தேரர் அவர்களே! முஸ்லிம்களுடைய விடயத்தை சற்று தள்ளி வையுங்கள். தாங்கள் நேசம் பாராட்டி வரும் தமிழ் மக்களுக்கு எவ்வளவோ தாங்க முடியாத சமூக அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. உங்கள் தலைமையில் இயங்கும் சிங்கள தமிழ் அமைப்பின் மூலமாக ஆகக் குறைந்தது மூன்று தமிழர் நலன் பயக்கும் சேவைகளைச் செய்துவிட்டு பத்திரிகைகளுக்கு அதுபற்றி தம்பட்டம் அடிக்க முடியுமா என்று முதலில் பாருங்கள்.

தமிழ் மக்களே தன்மானமுள்ள தமிழ் தலைவர்களே அத்துரெலிய ரத்னசார தேரவிடயத்தில் ஏமாந்து விடாதீர்கள். ஆடு நனையுதென்று ஓநாய் ஆழுகிறது. அப்படி நீங்கள் நம்புவதென்றால், 2009இல் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அது முஸ்லிம்களாள் செய்யப்பட்டதா? என்று கேளுங்கள். அதற்கு ஒரு நியாயமான தீர்வையும், நஷ்டஈட்டையும் பெற்றுத்தரச் சொல்லுங்கள். தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்கு உதவச்சொல்லுங்கள். கானாமல் ஆக்கப்பட்டவர்கள், பாதுகாப்பு தரப்பிடம் அகப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல் போன்ற இன்னோரன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு உடனடித் தீர்வுகளை பெற்றுத்தரச் சொல்லுங்கள்.

இந்த விடயங்களெல்லாம் இவரோ அல்லது இவருடைய தலைவர்களோ அல்லது இவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்ற இருக்கின்ற அல்லது வரப்போகின்ற எந்த அரசாங்கங்களாலோ தீர்வு கிடைக்கும் என்பதை கனவிலும் காணாதீர்கள்.

இதைப்புறிந்து கொள்ள முடியாத சில தமிழ் அரசியல்வாதிகள் நிச்சயம் மாட்டிக்கொள்வார்கள். அது எவ்வாறென்றால், குடலை கழுவுவதெற்கு நரியிடம் கொடுத்ததை போன்றதாகி விடும். மாட்டிக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகி விடும்...

Anush காட்டி,கூட்டி கொடுப்பது நீங்கள்தான்.உங்கள் பெண்களை எமது ஆண்களின் பின்னால் பனத் தேவைக்காக அனுப்பிவிட்டு,பின் மதம் மாற்ரி விட்டான் என கூவும் மாமா நீங்கள்

Ade moola ketta anush naga kaati kuduthomdu vachhci kollu. Apa karuna enna senjan naaye. Ltt naayhala la neradiya pathika patta vaga naaga ungala kaati kudukama laye kaati kuduthan solra.

@Deen Mohamed,
You are 100% right

காட்டிக் கொடுத்தவன் கருணா. இந்துக்களுகம் கிறிஸ்தவர்களும் எல்லாம் என்ன புண்ணியவான்களா? சந்தர்ப்பவாதிகள் நீங்கள் எல்லோரும். சிங்களவன் எங்கட குழந்தைகளையும் எங்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் கொலை செய்த என்று கூறிவிட்டு இப்ப அவனோட கை கைகோர்த்து செல்ரிங்க. உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா டா..

@Ajan இங்கு நடக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் புலம்பெயர் தமிழ் அகதி பயங்கரவாதிகள் தான். நாடே இல்லை ஆனால் நக்கி பிழைக்க சென்ற இடத்தில உருத்திரகுமார் எனும் கிருக்கனை பிரதமராக நியமித்திருக்கும் உங்கட அகதிகள் எவ்வளவு பெரிய கிருமிகள்கள் என்று உலகிற்கே தெரியும்.

Post a comment