Header Ads



சந்திரிக்கா என்ன செய்தார்..?

கம்பஹா - அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவில் 454 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் நிர்மானப்பணிகளை நானே ஆரம்பித்தேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஐந்து வருடங்களுக்குள் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 400 வீதிகள் அத்தனகல்ல பகுதியில் புனரமைக்கப்பட்டன.

நெடுஞ்சாலையின் நிர்மானப்பணிகளை நானே ஆரம்பித்தேன். நான் வீடு செல்லும் போது அதில் நான்கில் மூன்று பகுதி பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை தானே நிர்மானித்ததாக பரைச்சாற்றி சொல்கின்றார். பின்னர் சந்திரிக்கா என்ன செய்தார் என்றும் கேள்வியை வினவுகிறார்.

இந்நிலையில் நான் வழங்கிய கேள்வி மனுவை தடை செய்து, முக்கால் அளவிலான வீதி பணிகள் பூர்த்தியடைந்த நிலையில், மற்றொரு நிறுவனத்திடம் கேள்வி மனு இன்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.