Header Ads



புதிய அரசாங்கம் வந்தவுடன், ரதன தேரர் செய்யப்போகும் விடயம்

கடந்த 10 வருடங்களில் மாத்திரம் சிங்கள மற்றும் தமிழ் பெண்கள் 90 ஆயிரம் பேர் திருமணத்தின் மூலம் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடந்தும் குறிப்பிடுகையில்,

அடுத்து வரும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த 90 ஆயிரம் பேர் தொடர்பில் விசாரணையொன்றை நடத்தி, விரும்பியவர்களுக்கு தான் ஏற்கனவே இருந்த சமயத்துக்கு செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்போம்.

பாடசாலை வயதிலுள்ள பெண் பிள்ளைகளை திருமணம் முடிக்க முடியாது என்ற சட்டம் நாட்டில் அமுலில் இருந்தும், முதுகெலும்பு இல்லாத அரசாங்கத்துக்கு பயங்கரவாதி சஹ்ரான் பாடசாலை செல்லும் 8ஆம் ஆண்டு பிள்ளையை திருமணம் முடித்த போது தடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளை மணம் முடிக்கத் தடை செய்யும் விதத்தில் கடுமையான சட்டமொன்றையும் கொண்டுவரப் போவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Do you know when lord buddha got married what was his age and brides age?

    If you can bring the law against early marriage it is great and will resolve many social issues such early marriage and early devorce.
    It can be easily achived by implementing a law by education to every child is must till the age of 18.
    But our education system is very partial based on race, cast, religion etc.
    Dear Monk, try to treat the root cause but not the fruit.

    ReplyDelete
  2. ரத்தினசாரரை பொருட்படுத்த வேண்டியதில்லை விட்டுவிடுங்கள். ஆனால் ஜூலை 5ல் சர்வதேச செய்திநிறுவனமான றொய்ட்டர் வெளியிட்ட ”Wahhabism confronted: Sri Lanka curbs Saudi influence after bombings” என்கிற கட்டுரையையும் அண்மையில் இலங்கையில் வெளிவந்த பல கட்டுரைகளையும் பார்க்கிறபோது முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனத்துவ சக்திகளும் சிங்கள பெளத்த அரசும் 1. வஹாபிசம் 2. விசேட சட்டங்கள் மூலம் நடைபெறும் கலப்பு திருமணங்கள் என்கிற இரண்டு புள்ளிகளை மையப்படுத்தியே செயல்படப்போகின்றமை தெளிவாகியுள்ளது. வஹாபிசம் தொடர்பான பிரச்சினை முஸ்லிம்களுக்கும் சிங்கள அமைப்புகளுக்குமிடையிலான பிரச்சினையாக உருவாகிறது. ஆனால் கலப்புத் திருமணங்கள் தொடர்பாக சிங்களவர்மத்தியில் மட்டுமன்றி தமிழர் மலையக தமிழர் மத்தியிலும் எதிர்ப்புணர்வு வளர்ந்து வருகிறது.திருமணங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் சட்டத்திருத்தங்கள் வருமென உறுதியாகத் தெரிகிறது. இருந்தாலும் முஸ்லிம்களுக்கும் ஏனைய இனங்களுக்குமிடையில் நெடுங்காலமாகப் பகைவளர்க்கும் பகை வளர்த்துவரும் இனக் கலப்புத் திருமணங்கள் பற்றி முஸ்லிம் பள்ளிவாசல் சபைகளும் சிவில் சமூகமும் முஸ்லிம் ஊடகங்களும் அரசியல் ஆர்வலர்களும் விரிவாக விவாதித்து உள்ளார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய வேண்டிய அவசரச்சூழல் உருவாகியுள்ளது. தயவு செய்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவும்

    ReplyDelete
  3. WHAT EVER YOU ARE TRYING TO BRING IT NEVER BE AGAINST MUSLIM BUT IT WILL LOOK LIKE THAT ALLAH IS GREAT PLANER

    ReplyDelete

Powered by Blogger.