Header Ads



பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலினால், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஸ்டம் 60 பில்லியன்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை மிகச் சாதாரணமாக காட்டுவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹெட்டிப்பொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இன்று -20- நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத் தாக்குதலினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஸ்டம் 60 பில்லியனுக்கும் அதிகம், இது நாடு முழுவதிலும் அரசாங்கம் முன்னெடுக்கும் கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்படும் செலவுக்கு சமமானது.

சஹ்ரானின் தாக்குதலை சாதாரண நடவடிக்கையாக காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். 250 இற்கும் மேற்பட்டோர் இறந்தது பிரச்சினைக்குரியது அல்லவா? இந்தப் பிரச்சினைகளையும் சுமந்துகொண்டுதான் அரசாங்கத்துக்கு முன்னோக்கிச் செல்லவுள்ளது என்றார்.

2 comments:

  1. Besides the President, the entire Government including you must take the responsibility for the loss of lives as well as for the loss of this so called 60 billion rupees.

    ReplyDelete
  2. அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த குண்டு வெடிப்பை வைத்து முஸ்லிம்களுக்கு எதிராக நீங்கள் பண்ணிய கூத்தில் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் எத்தனை ஆயிரம் கோடிகள் என்கிற புள்ளி விபரம் இருக்கிறதா?

    ReplyDelete

Powered by Blogger.