June 29, 2019

IS அமைப்பும், புலிகளும் இணைந்துள்ளனர் - சம்பிக்க

ஐரோப்பாவில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவும், தமிழ் அடிப்படைவாத குழுவும் இணைந்து விசேட அமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசய என்ற சிங்கள பத்திரிகையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பும், புலிகளும் இணைந்து இலங்கை பல்வேறு அழுத்தங்களை கொடுக்க தயாராகி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இலங்கையில் தமிழ் சமூகமும் சிங்கள சமூகமும் கைகோர்த்துள்ள நிலையில், சர்வதேச ரீதியில் இஸ்லாம் மற்றும் தமிழ் அடிப்படைவாதிகளின் இணைந்துள்ளதாகவும் பொறுப்பான தரப்பினர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

12 கருத்துரைகள்:

இலங்கையின் அரசியல் சட்டத்தில் காணப்படக்கூடிய மிக பின்னடைவிற்கான ஒரு பெரும் இயல்பு என்னவெனில் நாட்டையும் சமூக ஒற்றுமையினையும் பாதிக்கக்கூடிய கருத்துக்களை வெறுமனே கூறக்கூடியவர்களைத் தண்டிக்கக்கூடிய சட்டங்கள் இன்னும் அதில் பலமாகச் சேர்க்கப்படவில்லை என்பதாகும். இதுவரை காலமும் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கான காரணங்களை நாம் ஆராய்கின்றபோது அரசியலில் பொறுப்பு வகிப்பவரகள் எனச் சொல்லப்படக்கூடியவரகள் வேண்டுமென்றே வெளியிடும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள்தான் என்பது மறுதலிக்க முடியாத ஒன்றாகும்.

அப்படியா?

Ippudiyellaamada unga ennam pohuthu....eppudi wahayaana arasiyal enpathu engaluku theriyum bt..unakku ottu podum makkalukku ippudi sonnatthaan nee wettry....

ஒரு பேச்சுக்கு மாத்திரம். கோவிலகளில் குண்டு வைத்தது இஸ்லாமிய அடிப்;படைவாதிகளின் செயல். மினுவாங்கொட ,குருநாகல், திகன, மாவனல்ல, Ampara போன்ற பல்வேறு இடங்களில் காணப்பட்ட முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் பௌத்த சிங்களக்காடையர்களினால் கூட்டாக ஏற்படுத்தப்பட்ட சேதங்கள்; போர்க் காலங்களில் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் தமிழ்க் காடையர்களினால் ((sorry for telling this) ஏற்படுத்தப்பட்ட சேதங்கள்; இவையெல்லாம் அடிப்படைவாதமற்ற இலங்கைக் குடிமக்களினால் ஏற்படுத்தப்பட்டவையா? Mr. Champika, தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைந்துவிட்டார்கள் என்பது நீங்கள் நீங்களாகவே உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கருப்புப் பிரமை. தமிழர்களின் உரிமைகள், சலுகைகள், சொத்தழிப்பு, உயிரழிப்பு, மானமிழப்பு என்பனவற்றை எல்லாம் மிகத் துணிகரமாக கூட்டாக செய்துவிட்டு சிங்களவர்களும் தமிழர்களும் கைகோர்த்துவிட்டனர் என்று சொல்வது எவ்வளவு பெரிய நகைப்புக்குரிய விடயம். முதலில் நீங்கள் தமிழ்ச் சமூகத்துடன் இணைய வேண்டுமாக இருந்தால் அவர்களது தலைமைகளுடன் பேசி அவர்கள் இழந்தனவற்றை மீண்டும் பெற்றுக் கொடுக்க முயற்சியுங்கள். அதனை விட்டுவிட்டு யாழிற்கும் கல்முனைக்கும் சென்று நாடகமாடிவிட்டு சிங்களவர்களும் தமிழர்களும் (இஸ்வாமியர்களுக்கு எதிராக) இணைந்துவிட்டார்கள் என்று நீங்கள் கூறினால் அது 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக் கிக்கான புலிட்சர் விருதினைப் பெறக் கூடிய சாதனையாகவே இருக்கும். ஆகக்குறைந்தது நீதிவிசாரணையின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளையாவது முதலில் விடுவிக்க முயற்சி செய்யுங்கள்.

Yes They Joined and Created BSBS with you. You Terror Champika.. History Knows about you...

இரண்டு பயங்கர கும்பலும் ஒண்ணாக இனைந்துவிட்டதா? முழு உலகுக்கே ஆபத்து.

තමුසෙල ජාතිවාදය අවුස්සලා ජීවත් වෙන්නැතුව කාලකන්නි මිනිස්සු වෙලා. තමුසෙගෙ බොදුබල සේනාව තමයි කාලකන්නි ජාතිවාදය අවුස්සන්නේ. සහරාන් ඇතිකෙරේ උඹලයි.

புலிட்சர் விருது வழங்குவது,பத்திரிகை துறையில் துனிச்சலுடன்,சவால்கலுக்கும்,அச்சுருத்தலுக்கும் மத்தியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு.மாறாக ஜோக் பேசும் நபர்களுக்கு அல்ல.ஜோக் பேசுபவர்கலுக்கு வேண்டுமானால் Oscar விருது வழங்கலாம் suhood MIY sir

ISS அமைப்பும் புலிகளும் கீரியும் பாம்பும் போன்ற கொள்கைகலைக் கொண்ட அமைப்புகள். கீரியை பிடிக்காவிட்டால் கீரியை திட்டுங்கள். பழி சொல்லுங்கள் நம்புவார்கள் கீரியும் பாம்பும் கூட்டு என உளாறாதீர்கள். அப்படிப்பேசினால் சிங்கள மக்களே “சம்பிகவுக்கு என்னாச்சு? இனவாதம் பித்துநிலைக்கு முற்றிவிடதே” என அங்கலாய்க்கப்போகிறார்கள்.

Magindha solraaru puligalai olithom enru ivar solraru puligal isis oda inaindhullanar enru ethuda unma

puliya patri eathum sonnalthan ivarkalal arasiyal seiya mudiyum.Ivarkal solvathai nampum oru moodar kooddam inrum iruppathathuthan athisayam.

Post a comment