Header Ads



Dr ஷாபியை விசாரிக்க, ஆணைக்குழு அவசியமில்லை – திவயின பத்திரிகை ஆசிரியருக்கு ஜனாதிபதி பதில்

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதற்கான தேவை இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரதானிகளுடன் இன்று -26- நடைபெற்ற சந்திப்பின் போது, குறித்த சம்பவம் தொடர்பில் ஆதாரங்களின்றி செய்தி வெளியிட்ட திவயின பத்திரிக்கை ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை வைத்தியர் ஷாபி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சட்ட வைத்திய அதிகாரிகள் சங்கம் போதுமானது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Group of judicial medical officers will conduct the investigations just for the sake president's request. Otherwise they allready know that allegations against Dr shafi is totally false and jokes.

    ReplyDelete

Powered by Blogger.