Header Ads



முஸ்லிம் என்பதாலேயே Dr ஷாபி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைப்பு - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

முஸ்லிம் என்ற காரணத்தினாலே வைத்தியர் ஷாபி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சி உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -27- அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் விவாதம் தொடர்பிலான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வைத்தியர் ஷாபி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுக்கொண்டே அவருக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். 

பொதுவாக ஒருவரை கைதுசெய்வதாக இருந்தால் அவருக்கு எதிராக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை விசாரிக்கப்பட்டே கைதுசெய்யப்படுவார். ஆனால் வைத்தியர் ஷாபியின் விடயத்தில் மாற்றமாகவே இடம்பெற்றிருக்கின்றது.

அத்துடன் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு இன்று குறிப்பிட்டதொரு சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையே காண்கின்றோம். 

தர்ம சக்கரம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் பெண்ணொருவர் ஒரு மாதகாலம் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். தர்மசக்கரத்தின் வடிவம் தெரியாத பொலிஸ் அதிகாரிகளே இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.