Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டொப்பாஸ் நிறுவன உரிமையாளர் நஸ்ரூன் நிதியுதவி

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சகோதர உறவுகளுக்கு உதவும் வகையில் யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு டொப்பாஸ் நிறுவன உரிமையாளர் ஏ.ஜி. நஸ்ரூன் அவர்கள் யாழ் மாநகர முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். 

மேற்படி கோரிக்கைக்கு அமைய யாழ் மாநகர முதல்வரால் குறித்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரின் ஏற்பாட்டிற்கு அமைய நேற்று (24) மாலை 6.00 மணியளவில் யாழ்  ஆ யர் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. 

குறித்த சந்திப்பில் யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள், யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட், டொப்பாஸ் நிறுவன உரிமையாளர் ஏ.ஜி.நஸ்ரூன், டொப்பாஸ் நிறுவன முகாமையாளர், மாநகர முதல்வரின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்  கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த சந்திப்பின் போது ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சிக்கல்கள், அதன் பின்னரான தற்போதைய  சூழ்நிலைகள், வர்த்தக ரீதியாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் தற்போதைய நிலைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. 

கலந்துரையாடலின் இறுதியில் டொப்பாஸ் நிறுவன உரிமையாளர் ஏ.ஜி.நஸ்ரூன் அவர்கள் 500 000 .00 ரூபாய்க்கான காசோலையை பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களின் பெயருக்கு யாழ் ஆயரிடம் கையளித்தார் 

இறுதியில் கருத்து தெரிவித்த டொப்பாஸ் நிறுவன உரிமையாளர் ஏ.ஜி.நஸ்ரூன் ஆயரினால் மேற்கொள்ளப்படும் கல்வி ரீதியான உதவித்திட்டங்களின் போது ஏதேனும் தேவைகள், உதவிகள் தேவைப்பட்டால் மாநகர முதல்வர் ஊடாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும், தான் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தில் நல்லிணக்கம் சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் ஆயரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

தகவல்:- என்.எம்.அப்துல்லாஹ் 


1 comment:

  1. இதுதான் எமது மனித நேயம்,முன்னதாக இன்னும் பல Muslim நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியிருந்தது.ஆனால் எந்த ஒரு இந்து நிறுவனமும் இன்னும் உதவிகளை வழங்கவில்லை,நீலிக் கண்ணீரும்,போலி நடிப்பு மட்டுமே

    ReplyDelete

Powered by Blogger.