Header Ads



அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்


அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வருமானால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்வதென காத்தான்குடி நகர சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி காத்தான்குடி நகர சபைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை. அவ்வாறு வருமானால் அதற்கெதிராக காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபையின் மாதார்ந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் 15வது மாதார்ந்த அமர்வு வியாழக்கிழமை இன்று காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் உட்பட காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த மாதம் இடம் பெற்ற சபை அமர்வின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபை ஏற்றுக் கொண்டதுடன் கடந்த மாதக் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த அமர்வின் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த விஷேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானமான காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் சில இடங்களில் எழுதப்பட்டுள்ள அரபு மொழியை அகற்றக் கோரும் உத்தியோக பூர்வமான அறிவித்தலுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் கலந்துரையாடப்பட்டு மீண்டும் அத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது வரை எவரிடமிருந்தும் அரபு மொழியை அகற்றுமாறு கோரி உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் வரவில்லை அவ்வாறு வருமானால் காத்தான்குடி நகர சபை நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கைக்கு செல்லும் என காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

அதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதிக்குப்பின்னர் நாட்டில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் சபையில் உரையாற்றிய தவிசாளர் அஸ்பர் குறிப்பிட்டார்.

8 comments:

  1. Remove that Tamil words in that Urban Council board. English and Singalam is more than enough

    ReplyDelete
  2. மோட வெட செய்துவிட்டார்கள் விற்றோபண்ண வெட்கமாக இருக்கு போல.

    ReplyDelete
  3. இன்று தென் இலங்கையில் அதிக வெறுப்புக்கு ஆளான நகரமாக காத்தான்குடி உள்ளது. வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் வட்டாரத்துள் இருக்கிறது மட்டும்தான் காத்தான்குடிக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது. கொஞ்சக்காலம் காத்தான் குடியின் பெயர் பரபரப்பு செய்திகளாக மாறாமல் பார்த்துக்கொள்வது முக்கியமென தோன்றுகிறது. இதை சொல்வது தவறு எனில் மன்னித்திடுக.

    ReplyDelete
  4. இதுவே இப்போதைக்கு மிகச்சரியான வழி.. இவ்வாறே முஸ்லிம்கள்மீது திணிக்கப்படும் எல்லாவித அநியாயங்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாடிப்பார்ப்போம்...

    ReplyDelete
  5. காத்தான்குடியை iSIS யின் பிடியிலிருந்து பாதுகாக்க ஞானசார குழுவினர் கிழக்கு வந்து போராட வேண்டும்

    ReplyDelete
  6. காத்தான்குடியை திருத்தி நல்வழிப்படுத்த, சிங்களவர்களுக்கு கிழக்கு தமிழர்கள் உதவி செய்யவேண்டும்

    ReplyDelete
  7. காத்தான்குடியில் தமிழை நீக்கினால் தமிழர் கவலை பட போறார்கள் என்று எண்ணாதே , நீங்கள் தமிழ் எழுதினால் என்ன எழுதாவிடடாள் என்ன அதை தமிழர் பொருட்படுத்தமாடடார்கள் , காத்தான் குடியில் எல்லோருக்கும் ஆங்கிலமும் சிங்களமும் வாசிக்க தெரிந்தால் சரி .

    ReplyDelete
  8. சிங்கம் மாதிரி நீங்கள் அங்கிருந்து பேசாமல், இங்கே வந்து பேசுங்கள் உங்கள் வீராப்புப் பேச்சுக்களை! சும்மா இருக்கும் எங்கள் வாய்களைச் சந்திக்கு இழுக்க வேண்டாம். தயவு செய்து தேவையில்லாத விடயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.