Header Ads



பயங்கரவாத தாக்குதலுக்கும் ரிசாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - பதில் பொலிஸ்மா அதிபர் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் எந்தவித தொடர்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இன்று -28- எழுத்து மூலமாக தகவல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரான் குழுவுக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் இடையில் நெருக்கிய தொடர்பு உள்ளதாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் குற்றம் சாட்டப்பட்டது.

சுமார் 10 குற்றச்சாட்டுக்களை வைத்து ரிசாத் பதியூதீனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. எனினும் அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த முன்னர் தனது அமைச்சு பதவியை ரிசாத் பதியூதீன் ராஜினாமா செய்திருந்தார்.

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களில் பயங்கரவாதிகளான சஹ்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் பயணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்திருந்தார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஆஜராகி சாட்சியம் வழங்கி வருகிறார்.

2 comments:

  1. Prosecute this wimal weerawanse for his consummate lies and libel at supreme court.

    ReplyDelete
  2. பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ரிஷாத்பதியுத்தீனுக்கு எதிராக ஆதாரமற்ற படுமோசமான முறையில் பொய்யிலும் மிகப்பெரிய பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி அவருடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் தவறாக வழி நடத்தி, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை புறியவைத்து பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும், விலைமதிப்பற்ற உயிர்களுக்கும் சேதம் விளைவித்த மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்றன நயவஞ்சக கூட்டத்தையும், தெரிவுக்குழுவுக்கு முன் அழைத்து விசாரித்து தகுந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராக எடுத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

    அந்த நயவஞ்சக கூட்டத்தில் விமல்வீரவன்ச,spதிசாநாயக்க,ரத்னசாரதேர,ஞானசாரதேர,சம்பிக்க,கம்மன்பில,மொட்டமுஸம்மில்,அமித்,பிரசாந்த் போன்றோர் முதன்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இவ்வாறானவர்களை பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரித்து தகுந்த தண்டணைகளை வழங்குவதன் மூலம் மாத்திரமே இலங்கை புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை மேலும் சிறப்படையச் செய்ய முடியும்.

    மலேசியாவிலிருந்து...

    ReplyDelete

Powered by Blogger.