June 09, 2019

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்களை அமெரிக்காவும், அரபு நாடுகளும் தட்டிக்கேட்க வேண்டும் - தூதுவர்களிடம் EIMF நேரில் வலியுறுத்து


சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இந்தவாரம், அமெரிக்க தூதரகத்தில் முக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது.

அமெரிக்காவின் சுவிற்சர்லாந்துக்கான தூதுவர் எட்வார்ட் மெக்மூலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரபு நாடுகளை சேர்ந்த 22 தூதுவர்கள் பங்கேற்றனர்.

இதில் சுவிற்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் சார்பில், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர்  ஹனீப் மொஹமட் மற்றும் செயலாளர் பௌசுல் அமீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர், மியன்மார் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சுட்டிக்காட்டினார்.

அவரது உரை முடிந்தபின் குறுக்கீடு செய்த, ஐரோப்பிய ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் ஹனீப் மொஹமட், நான் இலங்கையச் சேர்ந்தவன். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடக்கும் அநீதிகளை எடுத்துக்கூற சில நிமிடங்கள் இச்சபை தர வேண்டுமென உருக்கமாக வேண்டினார்.

இதன்போது இடையீடு செய்த அமெரிக்காவின் சுவிற்சர்லாந்துக்கான தூதுவர் எட்வார்ட் மெக்மூலன், ஏன் உங்களுக்கு நேரத்தை தரமுடியாது..? நீங்கள் இலங்கை முஸ்லிம்கள் குறித்து நேரடியாக பேசலாம் என்றார்.

இதன்போது உரையாற்றிய ஹனீப் மொஹமட், 

இலங்கை முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர். பயங்கரவாதிகளைக் காட்டிக்கொடுப்பவர்கள் வரிசையில் இலங்கை முஸ்லிம்களே முதலிடம் பெறுகின்றனர். இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுடன் நட்பாகவும், தமிழர்களுடன் சிநேகபுர்வமாகவும் வாழவே முஸ்லிம்கள் விரும்புகின்றனர். எனினும் முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளை அபகரிப்பதில் தற்போதைய அரசாங்கமும், பௌத்த குருமாரும், அவர்கள் சார்பு குண்டர்களும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மாத்திரம் 30 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பௌத்த குண்டர்களினால் தாக்கப்பட்டுள்ளன. கோடிக்காணக்கான முஸ்லிம்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் நின்று கொண்டிருக்க ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் இந்த அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

2000 க்கும் மேற்பட்ட, அப்பாவி முஸ்லிம்கள் சிறைகளில் வாடுகின்றனர். 

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையுடன் தொடர்புடைய பல நூற்றுக்கணக்கான பௌத்தசிங்கள வன்முறையாளர்கள் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். கைது செய்யப்பட்ட வன்முறையாளர்களும் பொலிசாரினால் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இந்த அநீதிகளையும், கொடூரங்களையும் தட்டிக்கேட்க அமெரிக்காவும் அரபு நாடுகளும் உடனடியாக முன்வர வேண்டுமென்றார்.

இதற்கு உடனடியாகவே பதில் வழங்கிய அமெரிக்கத் தூதுவர் இதுபற்றி தாம் கவனம் செலுத்துவதாக வாக்குறுதி வழங்கினார்.

அத்துடன் சவுதி அரேபிய, துருக்கி, பாகிஸ்தான் நாட்டுத் துதூவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் இதுபற்றி தமது நாடுகளுக்கு அறிவிப்பதற்காக இதுபற்றிய எழுத்துமூல ஆவணங்களை தம்மிடம் உடனடியாக ஒப்படைக்குமாறும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் தலைவர் ஹனீப் மொஹமட்டிடம் கோரினர்.

அந்த அடிப்படையில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஆவணங்களை தொகுத்து, அவற்றை அமெரிக்க மற்றும் அரபு நாட்டு தூதுவர்களிடம் கையளிப்பதில் இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அமைப்பான, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 கருத்துரைகள்:

Very good job Allah will accept your efforts

இந்த ஐநா வும் அமெரிகாவும் தான் பிரச்சினைக்கே காரணம்.தஜ்ஜாலின் பித்னா தான் இப்பொழுது நடைபெரும் அதனை நிகழ்வு களும். தஜ்ஜாலின் செயட்பாடுகளை நடைமுறை படுத்துவது தான் அமெரிக்கா வின் ஐநா வின் வேளை. அல்லாவின் மீது நம்பிக்கை வைத்து தஜ்ஜாலின் பித்னா வில் இருந்து பாதுகாப்பு தேடுவோம். பார்க்க.. https://youtu.be/HR8AI2hRL0Q

ஜஸாகல்லாஹு கைறா

Very prudent measures. Ja'zaakallah Khair..
Also please tell them to take stern actions against Srilanka and its racist monks.

நீதி வழங்கப்படவேண்டும் எல்லா மதத்தினருக்கும் ! குறிப்பாக இப்போது முஸ்லிம்களுக்கு இலங்கையில் செய்யப்பட்டுள்ள கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை உலகநாடுகள் தட்டிக்கேட்கவேண்டும் என்று வலியுறுத்திப்பேசியுள்ள ஹனீப் முஹமட் அவர்களின் குரல் நீதியின் குரலாக ஒலித்திருக்கிறது , நீதி நேர்மை விரும்பும் எல்லா மதத்தினருக்கும் நன்றி ! ஹனீப் முஹமட் அவர்களுக்கு மிகவும் நன்றி

Post a Comment