Header Ads



மதுமாதவ அரவிந்தவை கைதுசெய்ய, அவசியம் ஏற்படவில்லை - சட்டமா அதிபர்

பிவித்துரு ஹெல உறுமயவின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான அவசியம் ஏற்படவில்லை என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மதுமாதவ அரவிந்த தாக்கல் செய்த மனு புவனெக அழுவிஹாரே, எல்.லீ.பீ தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, மினுவாங்கொடையில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த விசாரணை அறிக்கையை கண்காணித்த போது மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மதுமாதவ அரவிந்த சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி மனோஹர டி சில்வா, தமது கட்சிக்காரர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் என்றும் நீதிமன்றத்தால் அறிவித்தல் விடுக்கப்படும் பட்சத்தில் அதில் முன்னிலையாக தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்றம் மனு விசாரணையை ரத்து செய்ய தீர்மானித்தது.

1 comment:

  1. nothing to surprise, this is the status of the law and order in sri lanka since many decade.

    ReplyDelete

Powered by Blogger.