June 23, 2019

'அடை­யா­ளங்­களை' இழந்து, கேள்விக்குறியாகும் இலங்கை முஸ்­லிம்ககளின் எதிர்காலம்..!

பாரம்­ப­ரி­யத்­தி­னூடு இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு கடத்­தப்­பட்ட இன, மத, கலா­சார அடை­யா­ளங்­களை இழப்­ப­தா­னது நமது வர­லாற்றின் பக்­கங்­களை நாமே கிழித்­தெ­றி­வதைப் போன்­ற­தாகும். இலங்கை முஸ்­லிம்கள் நிகழ்­கா­லத்தில் அவ்­வா­றான ஒரு நெருக்­கடி நிலை­யையே எதிர்­கொண்­டி­ருக்­கின்­றனர். 

தனித்­துவ அடை­யா­ளங்­களைக் கொண்ட இஸ்­லா­மி­ய­னா­கவோ அல்­லது முஸ்­லி­மா­கவோ அன்றி, ‘இரண்­டும்­கெட்­டான’ நிலைக்­குள்­ளான ஒரு ‘கலப்பு சமூ­க­ வி­லங்­காக’ வாழ்­வ­தற்­கான நிர்ப்­பந்­தங்கள், தெட்டத் தெளி­வாக முஸ்­லிம்கள் மீது தவணை அடிப்­ப­டையில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. 

ஒப்­பீட்­ட­ளவில் நோக்­கினால் ஒரு சாதா­ரண விட­ய­மான துருக்கித் தொப்­பிக்­காக முக்கால் நூற்­றாண்­டுக்கு முன்னர் போரா­டிய ஒரு இனக்­கு­ழுமம் இன்று பள்­ளி­வா­சல்­க­ளுக்­காக, ஹலால் உண­வுக்­காக, முஸ்லிம் பெண்­களின் ஆடைக்­காக, அர­பு­மொழிப் பயன்­பாட்­டுக்­காக மற்றும் இன்­ன­பிற அடை­யா­ளங்­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கத் திரா­ணி­யற்ற ஒரு இனக் குழு­ம­மாக ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

முஸ்­லிம்­களின் பொறு­மையின் மீதும் விட்­டுக்­கொ­டுப்பின் மீதும் இன­வாத மற்றும் பெருந்­தே­சிய சக்­திகள் யாகம் வளர்க்­கின்­றன. இஸ்­லாத்தின் பெயர்­தாங்­கிய பயங்­க­ர­வா­தத்­தினை எதிர்­கொள்ளல் என்ற தோர­ணையில் திரைக்குப் பின்னால் கடும்­போக்கு  சக்­திகள் குறிப்­பிட்ட பணித்­திட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இணைந்து பணி­யாற்­று­கின்­றன. 

காவி அர­சியல் 
இவை எல்­லா­வற்­றுக்கும் பின்னால் பெரும் அர­சியல் இருக்­கின்­றது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. அப்­பா­வித்­த­ன­மான முகத்தை காட்­டு­கின்ற, ஒன்­று­ம­றி­யாத அம்­மாஞ்­சி­யாக தென்­ப­டு­கின்ற நவீன அந­கா­ரிக தர்­ம­பா­லக்­களும் பண்­டா­ர­நா­யக்­க­களும் நம்­மி­டையே இருக்­கின்­றார்கள். கடும்­போக்கு இன­வா­தத்தை விட மென் ­இ­ன­வாதம் அத­ல­பா­தளம் வரை பாய்ந்து செல்­கின்­றது என்­பதை அர­சியல் நோக்­கர்கள் அறி­வார்கள். 

மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்கம் மல்­யுத்தம் பார்த்து ரசிப்­ப­வர்­களைப் போல புதினம் பார்த்துக் கொண்­டி­ருக்க, மறை­மு­க­மாக பௌத்த துற­வி­களே இப்­போது நிழல் ஆட்­சியை நடத்­து­கின்­றார்­களா என்ற வினா எழுந்­துள்­ளது. முஸ்­லிம்கள் மீது காவிகள் ஏவி விடப்­ப­டு­வதை காண முடி­கின்ற சம­கா­லத்தில், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எல்லா நகர்­வு­க­ளிலும் பௌத்த பிக்­குமார் மூக்கை நுழைக்கின்றனர் அல்­லது அந்த நகர்­வு­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

மறு­பக்­கத்தில், பெருந்­தே­சியக் கட்­சி­களின் முக­வர்­க­ளா­கவும் அவர்­க­ளுக்கு சாம­ரசம் வீசு­ப­வர்­க­ளா­கவும் இருக்­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை கொண்­ட­தாக கட்­ட­மைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் அர­சியல் பல­மி­ழந்து நிற்­கின்­றது. வழக்­கம் ­போல, எதிலோ மழை­பெய்­வது போல என்ன நடந்­தாலும் கணக்­கெ­டுக் ­காமல் அல்­லது யாரா­வது பார்த்துக் கொள்­ளட்டும் நமக்கேன் வீண்­வம்பு என்று தமது வேலை­களை மட்டும் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு சமூகம் எதை­யெல்லாம் இழக்­குமோ, அதை­யெல்லாம் முஸ்­லிம்கள் மெல்ல மெல்ல இழந்து கொண்­டி­ருக்­கின்­றனர் என்று சொல்­வதைத் தவிர வேறு வழி­யில்லை. 

துருக்கி தொப்பி எழுச்சி
1905ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ப­தி­யாக இருந்த சீ.பி. லெயாட் ஒருநாள் வழக்­கு­களை விசா­ரித்துக் கொண்­டி­ருந்தார். அப்­போது முஸ்லிம் சட்­டத்­த­ர­ணி­யான எம்.சி.ஏ. காதர், துருக்கித் தொப்பி அணிந்­த­வ­ராக நீதி­மன்­றத்தில் ஒரு வழக்கு சார்­பாக வாதிட எழுந்தார். அதைக் கண்ட நீதி­பதி, துருக்கித் தொப்­பி­ ய­ணிந்து நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­வதன் மூலம் நீதி­மன்­றத்தை அவ­ம­திப்­ப­தாக கூறிய நீதி­பதி, அவ்­விதம் வாதா­டு­வதை ஆட்­சே­பித்தார். 

ஆனால், துருக்கித் தொப்­பி­ய­ணிந்து ஆஜ­ரா­கு­வதன் மூலம், எது­வித அவ­ம­திப்­பையும் புரி­வ­தற்கு நான் எண்­ண­வில்லை. இது எனது மதத்­துக்­க­மைய பின்­பற்­றப்­படும் ஒரு வழக்­க­மாகும் என்று சட்­டத்­த­ரணி காதர் விளக்­க­ம­ளித்தார். அத்­துடன் இதனை அணி­வது தனது உரிமை என்று கூறி தொப்­பியை கழற்ற மறுத்­ததால் நீதி­மன்­றத்தில் இருந்து வெளி­யேற வேண்­டி­ய­நிலை ஏற்­பட்­டது. 

இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்தே வர­லாற்று சிறப்­பு­மிக்க துருக்கி தொப்பிப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அறிஞர் அஸீஸ் போன்றோர் இதற்­காக முன்­னின்­ற­துடன் மாக்கான் மாக்கார் உள்­ளிட்ட 21 முஸ்லிம் முக்­கி­யஸ்­தர்­களை உள்­ள­டக்­கிய துருக்கித் தொப்பி போராட்டக் குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஊட­கங்­களில் பிர­சாரம் செய்­யப்­பட்­ட­துடன், சுமார் 30 நக­ரங்­களில் கூட்­டங்­களும் நடத்­தப்­பட்­டன. 

இந்த சாத்­வீகப் போராட்­டத்தின் இறுதிக் கூட்­டமும் பேர­ணியும் மரு­தானை சாஹிரா கல்­லூரி மற்றும் பள்­ளி­வாசல் முன்­றலில் இடம்­பெற்­றது. இதன் வெற்­றி­யாக, முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் தொப்­பி­ய­ணிந்து மன்றில் ஆஜ­ராக முடியும் என்ற விடயம் சட்­ட­மாக்­கப்­பட்­டது. 

இவ்­வா­றுதான் முஸ்­லிம்­களின் கலா­சார அடை­யா­ளங்­களும், இன மத உரி­மை­களும் தக்கவைக்­கப்­பட்­டன. சாத்­வீக, ஜன­நா­யக முன்­னெ­டுப்­புக்கள் மூலமே குறைந்த இழப்­புக்­க­ளுடன் உரி­மை­களை பெற முடியுமே தவிர, சஹ்ரான் கும்பல் மேற்­கொண்­டது போன்ற முட்­டாள்­த­ன­மான குண்­டுத்­தாக்­கு­தல்­களால், வன்­மு­றையால் அதைச் செய்ய முடி­யாது என்­பதை விளங்கிக் கொள்ள வேண்டும். 

அக்­கா­லத்தில் துருக்கித் தொப்பி அணி­வது என்­பது ஒரு சாதா­ரண விட­ய­மாக பார்க்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஆனால், அன்று முஸ்லிம் பெரி­யார்கள் அதை அவ்­விதம் பார்க்­க­வில்லை. ஏனெனில் உண்­மையில் இது தொப்­பிக்­கான போராட்டம் அல்ல. முஸ்­லிம்­களின் மத அடை­யா­ளத்­தையும் அடிப்­படை உரி­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மக்கள் கிளர்ச்­சி­யா­கவே அமைந்­தது. 

இப்­போது தொப்­பியை இழக்க சம்­ம­தித்தால், நாளை இன்­னு­மொரு அடை­யா­ளத்தை, உரி­மையை பறிப்­ப­தற்­கான சூழல் கட்­ட­மைக்­கப்­பட்டு விடும் என்ற யதார்த்­தத்தை அன்­றைய முஸ்லிம் தலை­மைகள் தெளி­வாக விளங்கிக் கொண்­டார்கள். ஆனால், இன்று என்ன நடந்து கொண்­டி­ருக்­கின்­றது? முஸ்லிம் சமூ­கத்தின் அடை­யா­ளங்கள் எவ்­வாறு பறித்­தெ­டுக்­கப்­ப­டு­கின்­றன?

பின்­புலக் கார­ணங்கள் 
இலங்கை முஸ்­லிம்கள் முற்­கா­லத்தில் இருந்து நாட்டுப் பற்­றா­ளர்­க­ளா­கவும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு துணை நிற்­ப­வர்­க­ளா­கவும் இருந்­தமை உள்­ளிட்ட பல பின்­புலக் கார­ணங்­களால், இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு கணி­ச­மான வரப்­பி­ர­சா­தங்கள் கிடைத்­தன என்­பதை மறு­த­லிக்க முடி­யாது. தமது இனத்­துவ நெருக்­க­டிகள், சிவில் யுத்தம் என பல சவால்கள் ஏற்­பட்­டாலும் மார்க்கக் கட­மை­களை நிறை­வேற்­றவும், இன, மத அடை­யா­ளத்தை வெளிப்­ப­டுத்­தவும் இந்­நாட்டில் சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஆனால், தனித்­தி­யங்­கிய இன­வா­த­மா­னது பின்னர் அர­சி­ய­லுக்குள் இரண்­டறக் கலந்­தது. உள்­நாட்டு இன­வாத சக்­தி­க­ளுடன் பிராந்­திய கடும்­போக்கு அமைப்­புக்­களும் முஸ்­லிம்­களின் பரம விரோ­தி­களும் கைகோர்த்­தனர். சேவை­க­ளையும் கொள்­கை­க­ளையும் மட்டும் காண்­பித்து சிங்­கள வாக்­கு­களை பெற முடி­யாத, ஆனால் முஸ்லிம் வாக்­கு­களை கிள்­ளுக்­கீ­ரை­யாக பயன்­ப­டுத்­து­கின்ற வங்­கு­ரோத்து பெருந்­தே­சியக் கட்­சி­களை ஆட்­டு­விக்கும் மந்­தி­ர­மாக இன்று இன­வாதம் உரு­வெ­டுத்­தி­ருக்­கின்­றது. 

மறு­பு­றத்தில், முஸ்­லிம்­க­ளுக்குள் புதுப்­புது இயக்­கங்கள், மார்க்கக் கொள்­கைகள், அமைப்­புக்கள் முளைத்­தி­ருப்­ப­துடன் இவற்றுள் ஒரு­சில அமைப்­புக்­களும் செயற்­பாட்­டா­ளர்­களும் பல்­லின நாடொன்­றுக்கு பொருத்­த­மற்ற நடை­மு­றை­களை இறக்­கு­மதி செய­்துள்­ளன. இதனால் சில முஸ்­லிம்­களின் செயற்­பா­டுகள் ஒரு அரபு தேசத்­தி­லான நட­வ­டிக்கை போல பிறரால் அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. 

 சம­கா­லத்தில், அத்­துடன் இஸ்­லா­மோ­போ­பியா தாக்­கத்­திற்­குள்­ளா­கி­யுள்ள மன­நோ­யாளி தேசங்கள் சில இலங்கை முஸ்­லிம்கள் மீதும் ஒருகண் வைத்­தி­ருப்­ப­தாகச் சொல்ல முடியும். இந்த மாற்­றங்­களே இலங்­கையின் நிகழ்­கால முஸ்­லிம்­களின் வாழ்க்­கையில் ஏற்­பட்­டுள்ள புதுப்­புது நெருக்­க­டி­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது. கண்­கெட்ட பிறகே சூரிய நமஸ்­காரம் செய்­வ­தற்கு முஸ்லிம் அர­சியல், சமய, சமூகத் தலை­வர்கள் பிர­யா­சைப்­ப­டு­வதால், முஸ்­லிம்­களின் உரி­மைகள், அடை­யா­ளங்கள் இழக்­கப்­ப­டு­வதை தடுக்க முடி­யாது போயுள்­ளது. 

ஹலால் முதல் கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஹலால் உண­வுக்கு எதி­ராக கடும்­போக்கு இயக்­கங்கள் போர்க்­கொடி 

தூக்­கின. ஹலால் என்­பது (இஸ்­லாத்தின் பார்­வையில்) தூய்­மை­யான உணவு என்று இருக்­கையில், எமக்கு எதற்­காக ஹலால் உணவு என்று விதண்­டா­வாத கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. இதனால் ஹலால் சான்­றிதழ் விநி­யோக முறை­மையில் மாற்றம் கொண்டு வரப்­பட்­ட­துடன், முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால் உணவு கிடைப்­ப­தற்­கான உரி­மை­யையும் பகு­தி­ய­ளவில் இழந்­தி­ருக்­கின்­றனர் என்றே கூற வேண்டும். 

பின்னர் முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­ல­மான பள்­ளி­வா­சல்கள் அடித்து நொருக்கி தீ வைக்­கப்­பட்­டன. முஸ்லிம் பெரி­யார்­களின் அடக்­கஸ்­த­லங்­களில் வழி­பாடு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்ற கடுப்பில், உள்­ளக மாற்றுக் கருத்­தா­ளர்­க­ளாலும் அதேபோல் வெளிப்­புறச் சக்­தி­க­ளாலும், வர­லாற்று தொன்­மையைக் கூறும் அடை­யா­ளங்­க­ளான இவ்­வி­டங்கள் சிதைக்­கப்­பட்­டன அல்­லது கைவி­டப்­பட்­டன. 

பிறகு அபாயா பிரச்­சினை மேலெ­ழுந்­தது. ஆரம்­பத்தில் திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள பாட­சாலை ஒன்றில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா எனும் கலா­சார அடை­யா­ளத்­தை­யு­டைய ஆடையை அணிந்­து­வர அனு­மதி மறுக்­கப்­பட்­டதை அடுத்து அவ்­வி­வ­காரம் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இதற்­கி­டையில், முஸ்லிம் பெயர்­தாங்­கிகள் மேற்­கொண்ட மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை தொடர்ந்து நெருக்­க­டிகள் விஸ்­வ­ரூபம் எடுத்­தி­ருக்­கின்­றன. முஸ்­லிம்கள் ஒடுக்­கப்­பட வேண்­டி­ய­வர்­களே என்ற தோற்­றப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. முஸ்­லிம்­களின் வேறு­பல அடை­யா­ளங்­க­ளையும், புதுப்­புது கோணங்­களில் இருந்து பறித்­தெ­டுக்க பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதைக் காண முடி­கின்­றது. 

அந்தவகையில் முஸ்லிம் பெண்கள் தலை­யுட்­பட முழு உடம்­பையும் மறைத்து அணியும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு எதி­ரான தடை கொண்டு வரப்­பட்­டது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து நாட்டில் யாரை நம்­பு­வது என்ற ஐயப்­பாடு ஏற்­பட்­டி­ருந்த சூழலில் பாது­காப்பை பலப்­ப­டுத்தும் முக­மாக அவ­ச­ர­கால ஒழுங்கு விதி­களின் கீழ் புர்கா, நிகாப் தடை கொண்டு வரப்­பட்­டமை அவ­சி­ய­மா­னதே. 

அதன்­பி­றகு, அரபு எழுத்­துக்கள் பற்­றிய அச்­ச­மொன்று ஊட்­டப்­பட்டு வரு­கின்­றது. அரபு என்­பது உல­கி­லுள்ள 6500 மொழி­களில் ஒன்று என்று கரு­தாமல், சில பயங்­க­ர­வா­தி­களின் மொழியும் அர­பாக இருக்­கின்ற கார­ணத்­தினால் கிட்­டத்­தட்ட அரபு பயங்­க ­ர­வா­தத்தின் மொழி போல பார்க்­கப்­ப­டு­கின்ற பிற்­போக்­குத்­தனம் ஏற்­பட்­டுள்­ளது. 

இலங்கை முஸ்­லிம்கள் அர­பி­யர்­களும் அல்லர். கணி­ச­மா­னோ­ருக்கு அது தாய் மொழியும் இல்லை. எனவே அன்­றாட வாழ்­வுக்கு அரபு அத்­தி­யா­வசியம் என்று சொல்ல முடி­யா­துதான். ஆனால், அர­புதான் இஸ்­லாத்தின் போதனை மொழி என்ற அடிப்­ப­டையில் அதுவும் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு அடை­யா­ள­மாகும். ஆனால், இன்று அவ்­வ­டை­யா­ளத்தை கொஞ்சம் கொஞ்­ச­மாக இழந்து கொண்­டி­ருக்­கின்றோம். 

இலங்­கையில், மும்­மொழிக் கொள்கை அமுலில் உள்­ளது. அதற்­காக தனி­யான அமைச்சும் உள்­ளது. ஆனால், இன்றும் முக்­கிய அரச அலு­வ­ல­கங்­களில் உயர் பத­வியில் இருப்­போ­ருக்கு தமிழ் தெரி­யாது. எனவே, இன்றும் கூட தேசிய அடை­யாள அட்டை போன்­ற­வற்­றுக்கு விண்­ணப்­பிக்கும் போது ஒரு­சில ஆவ­ணங்­களின் மொழி பெயர்ப்பை கொண்டு செல்ல வேண்­டி­யுள்­ளது. இத­னை­யெல்லாம் சீர்செய்­யாது, சம்­பந்­தப்­பட்டோர் அரபு மொழியை நீக்­கு­வ­தற்கு நேரம் செல­வ­ழிப்­பது விநோ­த­மா­னதே. 

அபா­யா­வுக்கு தடை
இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற மிகப் பெரிய நெருக்­கடி அரச அலு­வ­ல­கங்­களில் முஸ்லிம் பெண்கள் தங்­க­ளது கலா­சார ஆடையை அணிந்து செல்­வ­தற்­கான உரிமை மறுக்­கப்­படும் விதத்தில், பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள அண்­மைய சுற்று நிரூபம் ஆகும். இதுவே இன்று முஸ்லிம் அர­சியல், சமூக அரங்கில் மிக முக்­கி­ய­மாக பேசப்­பட வேண்­டிய விட­ய­மாக உள்­ளது. 

பொது நிர்­வாக அமைச்சு கடந்த மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் ஆடை ஒழுங்கு சம்­பந்­த­மான புதிய சுற்­று­நி­ரூபம் ஒன்றை வெளி­யிட்­டது. இதில், அரச அலு­வ­ல­கங்­களில் பணி­பு­ரியும் பெண்கள் சாரி (புடைவை) அல்­லது ஒசரி வகை புடைவை அணி­வது கட்­டாயம் என்று 1ஆவது உப பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

உப பிரிவு 4 இவ்­வாறு கூறு­கின்­றது.- இதற்கு மேல­தி­க­மாக தங்­க­ளது கலா­சார அடை­யாள ஆடையை யாரா­வது அணிய விரும்­பினால், மேலே 1 இல் குறிப்­பி­டப்­பட்ட ஆடையை (புடைவை அல்­லது ஒசரி) அணிந்து அதற்கு மேல­தி­க­மாக தங்­க­ளது கலா­சார ஆடை ஒன்றை அணிய முடியும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இதன்­படி அரச அலு­வ­ல­கங்­களில் பணி­பு­ரியும் முஸ்லிம் பெண்கள் புடைவை உடுத்­து­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அபாயா அல்­லது ஸ்காப், பர்தா அணிய விரும்­பினால் அதில் ஒன்றை அணிந்து கொள்­ளலாம். இந்த சுற்­று­நி­ரூபத்­தின்­படி, புடைவைக்கு மேலால் அபா­யாவும் பர்தாவும் அணிய முடியாது என்று சட்டம் அறிந்தோர் கூறுகின்றனர். இந்நிலையில் புடைவையுடன் அபாயாவை மட்டும் அணிய முடியாது என்றபடியால் புடைவைக்கு பர்தாவும் அல்லது புடைவையும் ஸ்காபும் அணியும் நிர்ப்பந்தம் ஏற்படும். 

இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இச் சுற்றறிக்கையை  வாபஸ் பெற்று, திருத்தி சுற்றறிக்கை வெளியிடுவதாக பிரதமரும் அவரது அலுவலகமும் அறிவித்திருந்தனர். ஆனால், அதிகாரமுள்ள அதிகாரிகள் பிரதமரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதாலோ அல்லது அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாலோ இன்னும் மேற்படி சுற்றறிக்கை மீளப் பெறப்படவில்லை. இந்நிலையில், புடைவையை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை அமுல்படுத்துமாறு பொதுநிர்வாக அமைச்சு பிரதேச செயலகங்களுக்கு தற்போது அறிவித்துள்ளது.

இதனால் இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரச அலுவலகங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தமது தனித்துவ அடையாளத்தை இழந்து, வேறு உடைகளை அணியும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆடை அணிவது என்பது அவரவர் உரிமையாகும். நாகரிகத்தின் வளர்ச்சி என்பது மனிதன் நிர்வாண நிலையிலிருந்து உடம்பை மறைக்க தொடங்கியதாகும். அப்படியாயின் (முகத்தை மூடாத) அபாயா போன்ற ஆடைகள் உயரிய நாகரிகத்தைக் கொண்டவையாக கருதப்பட வேண்டும். ஆனால், ஏதோ காரணத்திற்காக இன்று அரச அலுவலகங்களில் அபாயாவுக்கு தடை வருமானால், இன்னும் சில நாட்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களிலும் அபாயா உடுத்த முடியாது போகலாம் என்பதை மறந்து விடக்கூடாது. 

ஏ.எல்.நிப்றாஸ்

2 கருத்துரைகள்:

What SLTJ and NTJ doing is to destroy Muslims historical symbol which prove the existence Muslims for thousand of years. They want to destroy all the symbol of Muslims including the wearing the cap too. TJes are not wearing the cap. For that they well paid.They are doing it in the name original Islam.

these TJes(Thaliban) in Afghanisthan angered the Buddhist world by destroying the Bamian buddha's statue.Pakistani Thaliban bombing Shrine of Islamic saint. recently they killed 35 Muslims in one the famous shrine in Pakistan. In Srilanka too they creating more problem for Muslims by joining with anti ?Muslim elements who want to destroy all the Muslims symbol.

நன்றி ஏ.எல்.நிப்றாஸ், சிறு சிறு விவாதங்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அடையாள நெருக்கடிகள்பற்றிய மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை.பொதுவாக வெளிவரும் பிரசார கட்டுரைகளைவிட இத்தகைய ஆய்வுக்கட்டுரைகள் சக இனங்களுக்கு கற்பிக்கிறதாக அமைகின்றன. வரவேறும் வாழ்த்துக்களும்

Post a comment