Header Ads



வென்னப்புவ சந்தையில் முஸ்லிம்களுக்கான, தடையைத் தகர்த்தது நீதிமன்றம்

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட தடைவிதிப்பதாக வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார். 

அதன்படி தங்கொட்டுவ பொலிஸாரிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மாரவில நீதிமன்றத்தில் கடந்த 25ம் திகதி விளக்கமளித்தனர். 

இதனையடுத்து வென்னப்புவ பிரதேச சபை தவிசாளர் கே.வி சுசந்த உட்பட 6 பேரை இன்று (28) நீதிமன்றத்தில் ஆஜராகி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அழைப்பானை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் குறித்த மனு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. எது எது எல்லாம் நமது அதிகாரத்திற்குட்பட்டதில்லை என்று நாட்டிலுள்ள அதிகமான அதிகாரிளும், அரசியல் வாதிகளும், சமயத்தலைவர்களும், பாமரமக்களும் கற்றறிந்துகொள்ளக்கூடிய அதிகமான சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து எத்தனை வீதமானவர்கள் கற்றறிந்து கொண்டார்கள் என்பது தெரியாது. மட்டுமல்ல அதிகமான குற்றச்செயல்கள் கூட
    இக்காலத்தில் அகப்பட்டுள்ளன.

    ReplyDelete

Powered by Blogger.