Header Ads



ஜனாதிபதி இன்று வெளிப்படுத்தியுள்ள, சில அதிரடி கருத்துக்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போடியிடுவதா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்திலேயே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கும் ஊடக பிரதானிகளுக்குமான விசேட சந்திப்பொன்று சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்த சில விடயங்களாவன :

* நாட்டின் ஸ்திரத் தன்மையின்மைக்கு 19 ஆவது அரசியல் திருத்தமே காரணமாகும். ஆகவே அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நான் கடந்த 4 ஆண்டுகளில் 10 க்கு மேற்பட்ட உறுப்பினர்களை என்னுடன் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றதில்லை. தஜிகிஸ்தானுக்கு 50 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுவதில் உண்மையில்லை.

* அமெரிக்காவுடானான  சோபா ஒப்பந்தம் குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, ரஷ்யாவுடனான பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். 

* ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

* மக்களின் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் பொய்.

* 21/4 தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாரளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒரு நாடகம். அதன் பிரதிகள் அலரிமாளிகையில் உள்ளது.

1 comment:

  1. No mention about minuwangoda racial violece against innocent Muslims.. A good leader came with 99% Muslim votes.

    ReplyDelete

Powered by Blogger.