Header Ads



ரதன தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி, இப்போதைக்கு தலையிடும் எண்ணம் இல்லை

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும்.

அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதேவேளை, “சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதால், தாம் தலையீடு செய்ய விரும்பவில்லை என்றும், எனினும் செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில்  இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வேன் எனவும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, கூறினார்.

2 comments:

  1. அவசரகால சட்டத்தில் இவனை கைது செய்து உள்ளே போடுங்கள்.அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது இந்தமதிரியான ஒன்று கூடல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. Arrest this racist monk under Emergency LAW...

    ReplyDelete

Powered by Blogger.