Header Ads



ஹிஸ்புல்லாஹ் கூறியதை, மன்னிக்க முடியாது

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடியில் அண்மையில் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாதது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அவரை விமர்சிக்கவில்லை எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ் எமது கட்சியின் உறுப்பினர். கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். எனினும் இலங்கையில் மாத்திரமே நாங்கள் சிறுபான்மை உலகில் பெரும்பான்மை என ஹிஸ்புல்லாஹ் கூறியது இந்த சந்தர்ப்பத்தில் ஆபத்தான மக்களை ஆத்திரமூட்டும் கருத்து.

இதனால், கட்சியின் மட்டத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. ஞானசார அரசுக்கு காலக்கெடு கொடுத்து அரசையே மிரட்டியதும் மக்கள் ஆத்திரப்படும்படி பேசியதும் நாட்டை இனக்கலவரம் வெடிக்கும் நிலைக்குக் கொன்டுவந்ததும் இவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை - உண்மையைப் பேசியது மட்டும் மக்களை ஆத்திரமூட்டுவதாக அமைந்துவிட்டதோ - முட்டாள் பயலே......

    ReplyDelete
  2. அவர் பேசியது உண்மைதான ஞானசார பேசினது எல்லாம் என்னவென்று சொல்ற

    ReplyDelete
  3. காலத்திற்கு காலம் தத்துவங்களும் மாற்றமடைகின்றன. அதாவது ஒரு முஸ்லிம் உண்மை கூறினால் அது குற்றம். ஒரு சிங்களவர் பொய் புரட்டுக்களைக் கூறி நாட்டை கலவர பூமியாக்கினால் அது மன்னிக்கப்படக்கூடிய குற்றம். அப்படித்தானே ஆச. திஸ்ஸநாயக.

    ReplyDelete
  4. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் பயந்து வாழ வேண்டும் உண்மையை தானே பேசினார் ஹிஸ்புல்லா அவர் மீது குற்றம் இல்லை நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியது யார் தவரான இன வெறி பிடித்த பேய்கள் அதில் நீயும் ஒருவன் மறந்து விடாதே எ ஸ் பி

    ReplyDelete
  5. இந்தமாதிரியான கயவர்களுக்கெல்லாம் பயப்படாமல் உண்மையை உரக்கச்சொல்லி இன்னும் உறுதியான முஸ்லீம் தலைவராக ஆகவேண்டும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த காவி பயங்கரவாதக்கூட்டத்திற்கு பயந்து அடிபணிவது!

    ReplyDelete

Powered by Blogger.