June 11, 2019

கிழக்கில் மறைக்கப்பட்ட 600 முஸ்லிம்களின் படுகொலை (ஜுன் 11)


1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச புதிய ஆயுதங்களை கிழக்கு பொலிஸ் நியங்களுக்கு வழங்கி ஒரு கிழமையில் கிழக்கில் LTTE யின் கட்டளை தலைமைகளான கருனா அம்மான் மற்றும் கரிகாளன் தலைமையிளான குழுவிடம் ஒப்படைக்க 800 பொலிஸ் பாதுகாப்பு படையினரின் உயிர் தாரைவார்க்கப்பட்டது.

சரன் அடைந்தவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 3 நாட்கள் அடைத்து வைத்திருந்து 4காவது நாள் இரவு இவர்கள் திருக்கோவில் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதி சமவெளியில் வைத்து LTTE யின் பொலீஸ் பிரிவுக்கு பொறுப்பாய் இருந்த நடேசனின் மேற்பார்வையில் 800 பொலிஸ் அதிகாரிகளும் நிர்வாணப்படுத்தி கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சுடப்பட்டு பின்னர் ஒரே கிடங்கில் போட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டார்கள் .

இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு பட்டும் உயிர் தப்பிய இரண்டே இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மாத்திரம் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஒருவர் ஹோமாகமையைச் சார்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபல் பின்னர் இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அடுத்தவர் ஒரு முஸ்லிம் இவர் பலாங்கொடையை சேர்ந்தவர்.

1994 சந்ரிகா பண்டாரநாயக ஜனாதியானதும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குளுவில் இந்த கிழக்கின் பொலிஸ் கொலை சம்பந்தமாக இவ் இருவரும் மாத்திரம் தான் இந்த சம்பவத்தில் இறுதிக் கட்டத்தில் சாவின் விளிம்பில் தப்பியவர்களாக சாட்சியம் அளித்தார்கள்.

பின்னர் அந்த திருக்கோயில் புதைகுழி அகழ்வுக்கும் ஆணைக்குழு சிபார்சு செய்தது….,.

ஒரு சிலதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை இந்த படுகொலைகள் சாதாரணமாக விடுதலைபுலிகள் செய்த கொலைகளுடன் இதுவும் ஒன்றாக கருத முடியாது. இந்த படுகொலைகள் அரச அனுசரனையில் விடுதலைப்புலிகள் நடத்திய கொலைகளில் மிகப்பெரிய படுகொலை யாகும். இம் மாதம் ஜுன் 11ம் திகதியோடு 28 வருடங்கள் கழிந்தும் இன்னும் இதன் மர்மங்கள் அகலவில்லை.

முன்னால் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜெரத்னவும் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவும் விடுதலைப்புலிகளின் தலைமைகலும் மாத்திரமே இதன் மர்மங்களை அறிவார்கள்.

விடுதலைப்புலிகளின் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் கருனா அம்மான் கடந்த மகிந்த அரசில் பல முக்கிய பதவிகள் மற்றும் அமைச்சுக்கள் பொறுப்பாக இருந்தும் இந்த கொலைகளுக்குரிய பின்னனியை அரசு கண்டரிய தவறிவிட்டது.

விடுதலைப்புலிகளின் முன்னால் கிழக்கு கட்டளை தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தற்போதைய முஸ்லிம் காங்கரஸ் உறுப்பினரும் முன்னால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமாகிய அலிசாகிர் மௌலானாவின் பாதுகாப்பில் வெளிநாடு ஒன்றில் தங்கி மீண்டும் இலங்கை வந்தபோதும் அதன் பின்னர் அவர் அமைச்சு பதவி வகிக்கும் போதும். திரு விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அந்த நேரங்களில் ஒருமுறை இந்த போலீஸ் கொலைகள் சம்பந்தமாக அவரிடம் வினவியபோது அவர் அதற்கான ஒரு நீண்ட பதில் கூறினர். ஆனால் அந்த பதில் திருப்தியடைய முடியாததாலும் அந்த பதில் இப்பிரட்சினையை வேறு திசைக்கு கொண்டுசெல்லும் என்பதால் நான் இங்கு பதிவிட விரும்பவில்லை.

THE WTF TIMES இணையத்தில் வெளிவந்த 17 TERRORIST ATTACKS THAT SHOOK THE WORLD ஆக்கத்தில் இடம் பிடித்த இலங்கையின் இந்த கொலைக்களம் இன்று 28 வருடங்களுக்கு பிறகு இவ்விடயத்தை நினைவுகூரும் நாம் அதே நேரத்தில் இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசபடைகளால் மேற்கொண்ட இன அழிப்பையும் மறந்துவிட முடியாது .

-U.H Hyder Ali-

4 கருத்துரைகள்:

muslim oorkaval padi veeramunaiyil 500 thamilargalai konrathu 1990 marnthu vittatha?athukku pathil ithu.

சரனடைந்தவர்கலை கொலை செய்த நடேசன்,கரிகாலன் அணிக்கும் இறைவன் அதே போல் தீர்ப்பு கிடைத்தது அனைவருக்கும் தெரியும் இறுதி யுத்த நாட்களில்.சில தமிழ் தலைமைகள் இன்னும் சொல்வது புலிகளின் ஆயுதத்தில் இருந்து பூக்கள் வந்ததாக.மன்சாச்சி இருந்தால் இவர்கள் புலிகலின் கொடூர முகத்தை தெரிந்தும் இவ்வாறு பேச மாட்டார்கள்.

இந்த நாட்டில் சிறுபாண்மையினர் கொல்லப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் சகஜம்.ஆனால் சிங்களவர்கள் துன்புறுத்தப்பட்டால் அதுதான் பாரிய விடயம்.இது எமது நாட்டின் style.

”இந்த படுகொலை அரசின் அனுசரணையுடன் விடுதலைப் புலிகள் நடத்திய கொலைகளுள் மிகபெரிய படுகொலையாகும்” இது முகியமான கூற்று. அனுசரணை என்று சொல்ல முடியாது. ஆனால் முஸ்லிம் ஆயுத தாரிகளை அரசு பயன்படுத்திவிட்டு தீவிரவாத சந்தேகத்தின் பேரில் அழிக்க விரும்பியபோதெல்லாம் அரசு தான் பயிற்றுவித்த முஸ்லிம்களை ஆபத்தான சூழலில் கைவிட்டுவிட்டு காட்டியும் கொடுத்திருக்கிறது என ஒரு கருத்துள்ளது. காத்தன்குடி மற்றும் மூதூர் தாக்குதல்கள் இப்படித்தான் சாத்தியமாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Post a comment